திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 102274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் தேசிய காங்கிரஸ் 38911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுரன சார்பில் விமலவீர திசாநாயக்க 63594 வாக்குகளையும் வீரசிங்க 56006 வாக்குகளையும் திலக் ராஜபக்ஷ 54203 வாக்குகளையும் ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எச்.எம்.எம்.ஹரிஸ் 36850 வாக்குகளையும் பைசால் காசிம் 29423 வாக்குகளையும் தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எல்.எம். அதாஉல்லா 35697 வாக்குகளையும் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஷர்ரப் 18389 வாக்குகளையும் பெற்று உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை. அங்கு அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிட்ட கருணா தரப்பும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை.
த.தே.கூட்டமைப்பு 25255வாக்குகளையும் கருணாஅம்மான் கட்சி 29379வாக்குகளையும் பெற்று தோல்வியைத்தழுவியதனால் அம்பாறைமொவட்ட தமிழ்மக்கள் மீண்டும் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
கருணா சார்புக் கட்சி 4124வாக்குகளால் த.தே.கூட்டமைப்பை தோற்கடித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை சம்மாந்துறை பொத்துவில் கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 05 இலட்சத்தி 13 ஆயிரத்தி 979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 402344 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 385997 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவானதோடு 16347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.