சுப்பிரமணியம் குகதாசன் புங்குடுதீவு 6 /கனடா
வேலணை மத்திய கல்லூரியில் எங்களோடு விடுதி வாழ்க்கை வாழ்ந்த தோழன்.விடுதியிலும் கல்லூரியிலும் நடைபெறும் அத்தனை விழாக்களிலும் நாங்கள் ஒரு குழுவாக இயங்கி நாடகம் ,வில்லுப்பாட்டு என்றெல்லாம் கலையுலகை அத்திவாரமிடட கோலங்கள் என் கண்முன்னே கண்ணீரை வரவைக்கிறது என் நண்பனே . கல்வி உறக்கம் இவை இரண்டை தவிர மீதி நேரம் முழுவதுமே கலை.சமூகசேவை ஊரில் அக்கறை என்றே தான் எங்கள் பேச்சும் செயலும் இருந்தது .வெளிக்கிடடி விசுவமடு நாடகத்தை பிரதி பண்ணி எத்தனை தடவை எத்தனை இடங்களில் களமாடி உள்ளோம் ,எத்தனை நாடகங்கள் எத்தனை நகைச்சுவை அரங்கேற்றங்கள் ,வில்லிசை நிகழ்ச்சிகள் . நீ என் நெறியாள்கை வெறிக்கு கிடைத்த கருங்கல் நண்பா உன்னை செதுக்கி செதுக்கியே உயர்ந்தவன் நானும் நண்பர்களும் தான் .அத்தனை வேடத்தி லும் நீ தந்த நடிப்பு உச்சம் விடுதி ஆசிரியர்களையெல்லாம் உருகவைக்கும் . எங்கள் ஏக்கத்தின் அவதாரம் தானே இன்று கலங்கரை விளக்காக ஒளிரும் ஐங்கரன் சனசமூக நிலையம் .விதி என் செய்வேன் சுமார் 45 வருடங்களாகியும் உன்னை தரிசிக்க முடியா மல் விடை பெற்று விட்டாய் . இன்னொரு பிறப்பு இருந்தால் வா நண்பா சேர்ந்தே சந்திரகலாமணி வில்லிசை செய்வோம் . சகோதரன் கோகிலதாசன் ,திருச்செல்வம், பஞ்சலிங்கம், ஜெயதாசன் ,செல்வா ,மகேஸ்வரன் ,(கேசவன்) நாமெல்லாம் கூடுவோம் ,பாடுவோம் , நாடகம் ஆடுவோம் எழுந்து வா என்னுயிரே