திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும்,இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும்,பொதுஜன பெரமுனவில் ஒருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எஸ்.தௌபீக்(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), இம்ரான் மஹ்ரூப்(ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோரும் இலங்கை தமிழ் அரசு கட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களும் பொதுஜன பெரமுனவில் கபில அதுகோரலவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர் தோல்வியடைந்துள்ளார்கள்.