தேசியப்பட்டியல் குறித்து தமிழரசுக் கட்சிச் செயலாளர் துரைராஜசிங்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு உருவாகிய கடுமையான எதிர்ப்பையடுத்தே இந்த முடிவை சம்பந்தன் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
அதற்கான பதில் கடிதத்தை சம்பந்தனுக்கு நேற்றிரவே மாவை சேனாதிராஜா, அனுப்பி வைத்துள்ளார். ;தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசி பொருத்தமான முடிவு எடுப்பேன்” என்று தனது பதிலில் மாவை தெரிவித்திருக்கிறார்.
இதன்படி யாழ்ப்பாணத்தில் புளொட், ரெலோ தலைவர்களுடன் மாவை சேனாதிராஜா இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகின்றது