புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2020

பதுளையில் செந்தில் தோல்வி! - வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி

Jaffna Editor.
நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பதுளை மாவட்டத்தில் 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது, அந்தக் கட்சியின் சார்பில் சுதர்சன தெனிபிட்டிய 71,766 வாக்குகளையும், தேனுக விதானகமகே 68,338 வாக்குகளையும், சாமர சம்பத் தசாநாயக்க 66,393 வாக்குகளையும், டிலான் பெரேரா 53,081 வாக்குகளையும் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி 50,151 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் வடிவேல் சுரேஸ் 49,762 வாக்குகளையும், அரவிந்தகுமார் 45,491 வாக்குகளையும் சமிந்த விஜேசிறி 36,291 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ad

ad