இலங்கையை சேர்ந்த 44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 44 பேரில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
-
24 டிச., 2022
44 இலங்கையர்களுடன் ரீயூனியன் தீவை சென்றடைந்த படகு!
சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் - பகீர் தகவல்கள்
பாரவூர்தியில் மறைந்திருந்து ஜரோப்பி நாடுகளுக்கு கொன்டு செல்லப்பட்ட குடியேற்றவாசிகள்…. ருமேனிய எல்லையில் அதிரடி கைது! இலங்கையரும் உள்ளதாக தகவல்
நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளானவர் உயிரிழப்பு
48 மணித்தியாலங்களில் இலங்கையை கடக்கப் போகும் தாழமுக்கம்!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது |
ஜனவரி 31க்குள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க நடவடிக்கை!
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார் |
16 தமிழ் அரசியல் கைதிகள் குறித்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை!
பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள். 16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். |
பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
வியட்னாமில் சிக்கிய 152 இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்!
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் |
23 டிச., 2022
வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை
22 டிச., 2022
திமுக எம்.பி., ஆ.ராசாவின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணத்திலிருந்து 104 ரோஹிங்யா அகதிகள் மாற்றம்!
வடக்கின் காணிகள்,அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
ராஜீவ் கொலை வழக்கு: விடுதலையான சாந்தனின் இலங்கை கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள்
தெல்லிப்பளை வைத்தியசாலைக்குப் கனடியத் தமிழர்களால் மருந்துகள் நன்கொடை
கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது |
எழிலனுக்கு என்ன நடந்தது?இரா.சம்பந்தன்
இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
கூட்டமைப்பு தலையில் மண் அள்ளிக் கொட்டியிருக்கின்றது-மணிவண்ணன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையில் மண் அள்ளிக் கொட்டியிருக்கின்றது. இதற்காக வருகின்ற காலத்தில் புரிந்து கொள்ளுவார்கள் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார் |
வியாஸ்காந்தின் பிரகாசிப்புடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜப்னா
பளை விபத்தில் ஒருவர் பலி; 17 பேர் காயம்
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினப் பதிவு: நிராகரித்து சுவிஸ் பாராளுமன்றம்
21 டிச., 2022
அ.தி.மு.க. யாருக்கு? - தீவிரம் அடையும் மோதல்! தேர்தல் ஆணையம் வைத்த 'திடீர்' டுவிஸ்ட்! எ
மீண்டும் வரும் ராஜபக்ச ஆட்சி - அநுராதபுரத்தில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிப்போம்
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிச்சயம் தோற்றுவிப்பார்கள். பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தை அநுதாரபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தா |
20 டிச., 2022
'விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி' - 9 பேரை கைது செய்த என்.ஐ.ஏ
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் கொலை! அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி: ஆச்சரியமான விடயம் குறித்து வெளியான தகவல்
மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலையில்
வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்கரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது |
இலங்கையில் அதிகரித்து வரும் உணவு நெருக்கடி
அரசியல் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 2022 இல் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது |
ரணிலுக்குப் பின்னால் செல்கிறது மொட்டு!
தம்வசமிருந்த ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் பறிகொடுத்து , அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் ஆயுட் காலம் நிறைவடைந்து விட்டது. எனவே சுதந்திர கட்சியை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் |
சம்பந்தனைச் சந்தித்தார் சொல்ஹெய்ம்!
சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது |
ரணிலுக்குப் பின்னால் செல்கிறது மொட்டு!
தம்வசமிருந்த ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் பறிகொடுத்து , அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் ஆயுட் காலம் நிறைவடைந்து விட்டது. எனவே சுதந்திர கட்சியை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். |
19 டிச., 2022
பருத்தித்துறை நகர சபைத் தலைவர் பதவி விலகல்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபையின் வரவு -செலவுத் திட்ட கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் நகர சபை தலைவர் யோ.இருதய ராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்- திரும்பிச் சென்ற ஓம்எம்பி !
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி) இன்றைய தினம் மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. |
Kylian Mbappé இனை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன்.
வியட்நாமில் உயிர்மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்
சமஸ்டி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பாதிக்காது!
சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் |
கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 24 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும், 16 வயதுக்கு குறைவான 14 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். |
உக்ரைன் விவகாரத்தில் சுவிஸின் நிலைப்பாடு குறித்து சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்
.சுவிட்சர்லாந்து அரசியல் ரீதியாக நடுநிலையை பேணும் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சுவிட்சர்லாந்தின்
சுவிஸில் காப்புறுதி முகவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளத் தடை
hePapare சம்பியன் கிண்ணம் கொழும்புக்கா? யாழ்ப்பாணத்திற்கா?
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: கலவர பூமியான பிரான்ஸ்!
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், பாரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர். |
பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய இலங்கை பெண்? எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பிக்பாஸ்
பிரான்ஸில் பதற்ற நிலை10 சிறுவர்கள் மரணம் மேலும் பலர் காயம்
8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
உலகக் கோப்பை கால்பந்து: "மெஸ்சி மேஜிக்" - அர்ஜென்டினா அணி "சாம்பியன்" https://www.dailythanthi.com/fifa-world-cup-2022/world-cup-soccer-messi-magic-argentina-team-champions-860561
தனியார் ஆக்கிரமித்துள்ள துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்!
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. |
தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா!
இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இந்த விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது |
மியான்மர் அகதிகள் 104 பேர் மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 104 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது |
18 டிச., 2022
இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதியுத்தம்: ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?
விடுதலை புலிகளின் முக்கியமான தலைகள் வெளியில் உல்லாசம்….. அப்பாவி 31 உறுப்பினர்களும் இன்னும் தண்டனை அனுபவிக்கின்றனர்! அவர்களை விடுவிக்க வேண்டுகோள்!
போட்டி போட்டு ஓடிய பேருந்துகள் - வீதியை விட்டு விலகி விபத்து
வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்றுகாலை இவ் விபத்து இடம்பெற்றது |
ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு!
ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர் |
தெரியாமல் பேசவில்லை, தெரிந்தே தான் கூறினேன்! - சுமந்திரனுக்குப் பதிலடி.
உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தான் அவை என தமிழீழ மக்கள் விடுதலை கழக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார் |
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட 244 பேர் குறித்து விசாரணை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
17 டிச., 2022
நித்தியானந்தாவுக்கு லண்டனில் விருந்தளித்த இங்கிலாந்து எம்.பி.க்கள்
தமிழகத்தின் சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவுக்கு லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் தீபாவளி விருந்து கொடுத்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. முதலில் கிரிவலப் பாதை எனப்படும் நடைபாதையில் குடில் அமைத்து ஆசிரமம் அமைத்தவர் நித்தியானந்தா. ஊடக வெளிச்சங்களில் நித்தியானந்தா புகழ் பெற்றார். |
16 டிச., 2022
அயர்லாந்து பிரதமராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி ஓரினச்சேர்க்கையாளர்!
ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் பதவியேற்கவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன |
கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்
ஈரான் கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலை
வல்லையில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்கள் கம்பத்துடன் திருட்டு!
வெறுமனே ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள் அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும்
துணவி பகுதியில் சிறுவனின் வாயில் சூடு வைத்த ஆசிரியர்!
துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது |
பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் ஒருவரை தீவகப் பகுதியில் எவ்வாறு வளவாளராக நியமித்தீர்கள்
யாழ். வலய பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் ஒருவரை தீவகப் பகுதியில் எவ்வாறு வளவாளராக நியமித்தீர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் வட மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார் |
சொந்த மகளை பாலியல் வல்லுறவு புரிந்த தந்தைக்கு 15 வருட கடூழியச் சிறைத்தண்டனை!
மது போதையில் சொந்த மகளை பாலியல் வல்லுறவு புரிந்த தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். |
கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்!
அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார். |
மார்ச், ஏப்ரலில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும்.நாடு இருளில் மூழ்கும்!
எதிர்காலத்தில் கடுமை மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார் |
கொழும்பின் முக்கிய வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை!
ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
15 டிச., 2022
காணாமல் போனோர் விவகாரம்- ஐசிஆர்சியிடம் ஒப்படைக்க திட்டம்
சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பணியை மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பச்சைக் கொடியை காண்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஐதேகவுடன் கூட்டணி அமைப்பதால் மொட்டுக்கு பாதிப்பு இல்லை!
ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியமைப்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கூட்டணியில் பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தா |
சாவகச்சேரியில் விடுதிக்குள் நுழைந்த முதலை
சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை இன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது |
தனித்துப் போட்டியிடுவது குறித்து பங்காளிகளுடன் இணைந்தே தீர்மானம்!
தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து , பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
வடக்கு ஆளுநருக்கு எதிராக தடைகேள் ஆணை மனு!
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடைகேள் ஆணை மனு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது |
கனடாவுக்கு வந்த அகதிச் சிறுமி விபத்தில் பலி!
உக்ரைன் போருக்குத் தப்பி புதுவாழ்வைத் துவங்குவதற்காக அகதியாக கனடா வந்த சிறுமி ஒருத்தி, வாழ்வு துவங்கும் முன் விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை, மொன்றியலிலுள்ள Ville-Marie பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறாள் மரியா (Maria Legenkovska, 7) என்ற சிறுமி. |
வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞனின் சடலம் மீட்பு!
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு - நீதிமன்றம் தடை
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது |
கூட்டமைப்பு திசை மாறுவது மாவீரர்களுக்கு செய்யும் துரோகம்
வெளிநாடுகளுக்கு கண்துடைப்பாக இப்பொழுது இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளை தீர்க்கவேண்டுமாக இருந்தால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் பேச்சுவார்த்தையாகும். இந்த மாயைக்குள் தமிழர்தரப்பினை கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்று ரணில் முனைகின்றார் என தமிழ் தேசியமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோனோகராதலிங்கம் தெரிவித்துள்ளார் |
றொரன்டோவிற்கு விடுக்கப்பட்டுள்ள காலநிலை முன் அறிவிப்பு! [Wednesday 2022-12-14 18:00]
றொரன்டோ பெரும்பாக பகுதியில் பத்து சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கனடாவை தாக்கும் பனிப்புயல் நிலைமையினால் றொரன்டோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் |
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்
வீடு புகுந்து கொள்ளை - பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது - நகைகளும் மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களிடமிருந்து ,
14 டிச., 2022
பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சைத்துரோகம்
இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த பச்சைத்துரோகம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம |
விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் இடையே 186 மில்லியனுக்கு புதிய ஒப்பந்தம்
பிக் பாஸ்சில் சேர்த்து விடுவதாக கூறி அம்மாவையும் மகளையும் துவம்சம் செய்த சுவிஸ் நபர் இவர் தான்
வர வர எங்கட தமிழ் சனங்கள் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. வவுனியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பம் ஒன்று சுவிஸ் நாட்டில் பேன் நகரில் வசித்து வந்த நிலையில். அன் நாட்டில் பிறந்து வளர்ந்த மகள் ஒருவரும் இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளார். அடிக்கடி டிக்-டாக் வீடியோ செய்து விடும் மகளை, சுவிஸ் நாட்டில் உள்ள தமிழர் ஒருவர் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அம்மாவும் மகளும் அன் நபருடன் சென்னை சென்று திரும்பி உள்ளார்கள்.
காரைநகரில் காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்!
காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர் |
தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கம்
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக நேற்றைய சர்வகட்சி கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் |
ஒரே நேரத்தில் மூன்று விடயங்களை பரிசீலிக்க அரசாங்கம் இணக்கம்
ஒரே நேரத்தில் மூன்று விடயங்களை பரிசீலிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |