புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2022

Kylian Mbappé இனை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன்.

www.pungudutivuswiss.com

உலகக்கிண்ண இறுதிப்போட்டி நிறைவடைந்ததும் Kylian Mbappéனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

கட்டார், லுசெய்ல் அரங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியினைக் காண ஜனாதிபதி மக்ரோன் நேரில் சென்றிருந்தார். பிரான்ஸ் ஆர்ஜண்டினா அணிகள் மோதிய பரபரப்பான போட்டியில், பெனால்டி மூலம் ஆர்ஜண்டினா வெற்றி பெற்றது.

முற்று முழுதாக ஆர்ஜெண்டினா பக்கம் இருந்த போட்டியினை - பிரான்ஸ் வீரர் Kylian Mbappé தனி ஒரு நபராக கட்டி இழுத்து பிரான்ஸ் பக்கம் திருப்பினார். ஹாட்-ட்ரிக் கோல்களை எடுத்து பிரான்சை வெற்றியின் திசைக்கு கொண்டுவந்தார்.

போட்டி சமநிலையில் முடிந்ததால் பெனால்டி மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் ஆர்ஜண்டினா அதிக கோல்களை எடுத்து சாம்பியன் ஆனது.

இறுதி நொடியில் வெற்றியை தவறவிட்ட பிரான்ஸ் அணி சோகத்தில் ஆழ்ந்தது. ஒட்டுமொத்த பிரெஞ்சு தேசமும் சோகத்தில் மூழ்கியது.

போட்டியினை தனது துணைவியாருடன் நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மக்ரோன், போட்டி நிறைவடைந்ததும் மைதானதுக்குள் ஓடிச்சென்று Kylian Mbappéனை கட்டித்தழுவி ஆற்றுப்படுத்தினார்.

“நீங்கள் எங்களுக்கான கனவை உருவாக்கியுள்ளீர்கள். எங்கள் அணி குறித்து நாங்கள் பெருமையடைகிறோம்!” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். 

ad

ad