புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2022

மீண்டும் வரும் ராஜபக்ச ஆட்சி - அநுராதபுரத்தில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிப்போம்

www.pungudutivuswiss.com


ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிச்சயம் தோற்றுவிப்பார்கள். பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தை அநுதாரபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தார்.

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிச்சயம் தோற்றுவிப்பார்கள். பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தை அநுதாரபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது. அதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்களே தவிர நாட்டுக்கு தீங்கிழைக்கவில்லை. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். எக்காரணிகளுக்காகவும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம். 2018ஆம் ஆண்டு முதல் நாட்டு மக்கள் பொதுஜன பெரமுவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிப்போம். மக்கள் மத்தியில் செல்வதற்கு எமக்கு எவ்வித அச்சமும் கிடையாது. பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தை அனுராதபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்றார்.

ad

ad