புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2022

தெல்லிப்பளை வைத்தியசாலைக்குப் கனடியத் தமிழர்களால் மருந்துகள் நன்கொடை

www.pungudutivuswiss.com

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது.

கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது

இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவால் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 செப்ரெம்பர் மாதம் 11 ஆம் தேதி கனடியத் தமிழர் பேரவையினரால் பதினான்காவது வருடாந்த தமிழ்க் கனடிய நிதிசேர் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதெனத் திட்டமிடப்பட்டது.

இந்த நன்கொடையின் முதற்கட்டமாக கனடியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதல் தொகுதி மருந்துப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை 20 ஆம் தேதி, மாலை 4:30 மணியளவில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குக் கையளிக்கப்பட்டது.

கனடியத் தமிழர் பேரவையின் முன்னாள் இயக்குநர் சபை உறுப்பினர் சிவம் வேலுப்பிள்ளை, சிவபூமி அறக்கட்டளையின் நிறுவனர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) கலாநிதி ஏ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்தியர் ஆர்.சுரேந்திரகுமரன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சி.ஹரிஹரன், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் இடம்பெற்ற மருந்துகளை வழங்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

எதிர்வரும் வாரங்களில் ஏனைய ஐந்து மருத்துவமனைகளுக்குமான நன்கொடைகள் கனடிய தமிழ் காங்கிரஸினால் ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்படும்.

ad

ad