புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2022

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் கொலை! அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி: ஆச்சரியமான விடயம் குறித்து வெளியான தகவல்

www.pungudutivuswiss.com
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி, வர்த்தகர் தினேஷை கொலை செய்ய முயற்சித்ததாக கருதப்படும் கொலையாளி, கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமஸிற்கு குறுஞ்செய்தி தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் குறுஞ்செய்தி, கொலையாளியினால், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பிரையன் தோமஸின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட, இந்தக் குறுஞ்செய்தி, பொரளை பொது மயானத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள ஆச்சரியமான தகவல்

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் கொலை! அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி: ஆச்சரியமான விடயம் குறித்து வெளியான தகவல் | Businessman Dinesh Murdered In Colombo

அந்த குறுஞ்செய்தியில், I'm waiting for, (நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமக்கு சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தோமஸ் அக் குறுஞ்செய்திக்கு பதிலளித்திருந்தார்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ், ஃப்ளவர் வீதியில் உள்ள தமது வீட்டிலிருந்து நேரடியாகவே, பொரளை பொது மயானத்திற்கு வந்ததாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் பல சந்தேகத்திற்குரிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பல ஆச்சரியமான தகவல்களும் வெளியாகியுள்ளன என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபரங்களை சரிபார்த்த பின்னர், பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்றும் குற்றப்புலனாய்வு அதிகாரி  குறிப்பிட்டுள்ளதாக செய்திகளின் வெளியாகியுள்ளன.

ad

ad