புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2022

தனியார் ஆக்கிரமித்துள்ள துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல  காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி  இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான மாவீரர்களின் உறவினர் 4 பேருந்துகளில் சுமார் 400 பேரும் கிராம மக்களும் இணைந்து குறித்த இடத்திற்கு வந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாக்குவாதங்களை அடுத்து குறித்த பகுதியில் புதைகுளி அமைந்துள்ள பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ad

ad