உடையார் கட்டுப்பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையினை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது இன்றுகூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் ஒரு பிரதிநிதியாக நாங்கள் உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய அர்ப்பணிப்பால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலத்தில் மிகவும் ஒற்றுமையாகவும் நேர்மையாகவும் அர்பணிப்புடனும் செயற்பட்டது என்றார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்றும் அதே இலட்சிய வேட்கையுடன் விடுதலை உணர்வுடன் செயற்படுகின்றதா என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அன்று செய்து காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்றுபோல் இன்றும் செயற்படுகின்றதா என்ற கேள்வி எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது என்றார். இன்றைய காலத்தில் மக்களிடத்தில் சந்தேகம் ஏற்படுகின்ற அளவிற்கு கூட்டமைப்பின் செயற்பாடு இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எந்த நோக்கத்திற்காக இது உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரைக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஓரணியாக பயணிக்கவேண்டும் அந்த விடுதலை இலட்சியத்தை நிதந்தரதீர்வினை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வரைக்கும் நாங்கள் ஓய்ந்திருக்கமுடியாது ஒய்வோமாக இருந்தால் அல்லது காட்டிக்கொடுப்போமாக இருந்தால் அல்லது திசைமாறி நாங்கள் செல்வோமாக இருந்தால் நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் மறைந்த மாவீரர்களுக்கும் அவர்கள் செய்த தியாகத்திற்கும் நாங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும் என்றார். |