புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2022

hePapare சம்பியன் கிண்ணம் கொழும்புக்கா? யாழ்ப்பாணத்திற்கா?

www.pungudutivuswiss.com
இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்து நடத்தும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகள் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளன.

இலங்கையில் உள்ள முன்னணி 20 பாடசாலைகளின் 20 வயதின்கீழ் அணிகள் பங்கேற்ற இம்முறை தொடரில், குழுநிலைப் போட்டிகள், காலிறுதி மற்றும் அரையிறுதி என அனைத்து சுற்றுப் போட்டிகளிலும் தோல்வி காணாத அணியாகவே இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

எனவே, செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் இறுதிப் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

மிகவும் விறுவிறுப்பாக சென்ற குழு A இற்கான போட்டிகளின் முடிவில் தமது நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், இரண்டு சமநிலை முடிவுகள் என்பவற்றுடன் தோல்வி காணாத அணியாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் முதலிடம் பெற்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வீரர்கள், கொழும்பு கேட்வே கல்லூரியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகினர்.

கொழும்பில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வீரர்கள் 5-1 என்ற கோல்கள் கணக்கில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியை வீழ்த்தி முதல் முறையாக கிண்ணத்தின் இறுதி எதிர்பார்ப்பான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தொடர் முழுவதும் எதிரணிகளுக்கு வெறும் மூன்று கோல்களை மாத்திரம் விட்டுக்கொடுத்த யாழ் வீரர்கள், தமக்காக 13 கோல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குழுநிலை

பதுரியா கல்லூரி 1 – 3 யாழ். மத்திய கல்லூரி

யாழ். மத்திய கல்லூரி 2 – 1 களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி

யாழ். மத்திய கல்லூரி 0 – 0 புனித செபஸ்டியன் கல்லூரி

கொழும்பு ஸாஹிரா கல்லூரி 0 – 0 யாழ். மத்திய கல்லூரி

காலிறுதி – யாழ். மத்திய கல்லூரி 3 – 0 கேட்வே கல்லூரி

அரையிறுதி – யாழ். மத்திய கல்லூரி 5 – 1 அல் அக்ஸா கல்லூரி

சென் ஜோசப் கல்லூரி

முதல் சுற்றில் குழு Cயில் இடம்பெற்ற புனித ஜோசப் கல்லூரி அணியினர் தமது 4 போட்டிளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

காலிறுதிச் சுற்றில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை 2-0 எனவும், அரையிறுதியில் பலம் மிக்க யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 1-0 எனவும் வெற்றி கொண்ட சென் ஜோசப் அணியினர் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது முறை சம்பியனாவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

சிறந்த பலம் கொண்ட அணியாக உள்ள சென் ஜோசப் வீரர்கள் தொடரில் இதுவரை 18 கோல்களை தமது அணிக்காக பெற்றுள்ளதுடன், எதிரணிகளுக்கு வெறும் 4 கோல்களையே விட்டுக் கொடுத்துள்ளனர்.

அணியின் பலத்தைப் பற்றி குறிப்பிடும்பொழுது அனுபவ வீரர் பெதும் கிம்ஹான் மற்றும் தேஷான் துஷ்மிக்க ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். எனினும், தேஷானுடன் மத்திய களத்தில் ஆடும் டேவிட் கருனாரத்ன கடந்த போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டமையினால் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். எனவே, அது அவ்வணிக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ளது.

குழுநிலை

சென் ஜோசப் கல்லூரி 4 – 2 கிங்ஸ்வூட் கல்லூரி

டி மெசனொட் கல்லூரி 0 – 5 சென் ஜோசப் கல்லூரி

சென் ஜோசப் கல்லூரி 2 – 1 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

றோயல் கல்லூரி 0 – 4 சென் ஜோசப் கல்லூரி

காலிறுதி – சென் ஜோசப் கல்லூரி 2 – 0 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

அரையிறுதி – சென் ஜோசப் கல்லூரி 1 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி

இறுதியாக,

எவ்வாறிருப்பினும், தேசிய மட்டத்தில் உள்ள முன்னணி பாடசாலை அணிகள் பலவற்றை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ள இந்த இரண்டு அணி வீரர்களும் கிண்ணத்திற்கான தமது போராட்டத்தை இறுதி நொடி வரை கைவிட மாட்டார்கள் என்பது உறுதி.

ஏற்கனவே, ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் முதல் பருவத்தில் சம்பியனாகியுள்ள சென் ஜோசப் வீரர்கள் இரண்டாவது முறை கிண்ணத்தை வெற்றி கொள்வார்களா? அல்லது தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறை தெரிவாகியுள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் முதல் முறை வட மாகாண அணியாக கிண்ணத்தை வெற்றி கொள்வார்களா? என்பதை பார்ப்போம்.

ad

ad