வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, உடனடியாக நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான
-
10 ஜூலை, 2019
இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன் கைது!
யாழ்ப்பாணம்- ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
தவறான அணுகுமுறைகளால் சந்திப்பு சாத்தியமற்றுப் போனது! - விக்கி
தவறான அணுகுமுறைகளினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டணி குறித்த பேச்சு சாத்தியமாகாமல் போயுள்ளது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தவறான அணுகுமுறைகளினால் தமிழ்த்
சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற மௌலவி ரிஐடியிடம் ஒப்படைப்பு!
நிகவெரட்டிய குற்றத்தடுப்பு பிரிவினரால் மே மாதம் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மங்சாவல பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ராஜ் கோபால் முதியங்சலகோ இஸ்மயில் மொஹம்மது நஸீர் என்பவரே தீவிரவாத
தமிழ் இராச்சியம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது-ஸ்ரீகாந்தா
இலங்கை சிங்கள மக்களுக்கு சொந்தமானது, சிங்கள இராச்சியம் ஒன்றை உருவாக்கவேண்டும் என நினைத்தால் தமிழ் இராச்சியம் ஒன்று உருவாவதை எவராலும் தடுக்க முடியாது. என்பதை அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறோம்.
சிறுபான்மை முஸ்லிம்கள் எம்மை ஆளும் நிலைமை?அத்துரலிய தேரர்!
இந்த நாட்டிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றுதே பௌத்த பிக்குகள் முன்னுள்ள பிரதான பிரச்சினையாகும் எனவும்,
விகிதாசார தேர்தல் முறைமையினால் பெரிய கட்சிகள் எந்தவொன்றும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் காணப்படுவதாகவும்
20 லட்சம் முஸ்லிம்களையும் வெட்டி கடலில் வீச முடியாது-ஞானசார தேரர்
இந்த நாட்டிலுள்ள 20 லட்சம் முஸ்லிம் மக்களையும் வெட்டி கடலில் வீச முடியாது எனவும், இந்த நாட்டிலுள்ள இஸ்லாம் அடிப்படைவாதம் குறித்த பிரச்சினையை தீர்க்கும் அதிகாரத்தை தேரர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கங்களிடம் கூறுவோம் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
9 ஜூலை, 2019
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: வைகோவின் மனு ஏற்கப்பட்டது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி
விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை காப்பாற்றும் வகையில், பதவி விலகிய எம்.எல்.ஏ.க் களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மந்திரிகள் அனைவரும்
7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் - சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையை சரியாக செய்தோம், இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
யாழ்.கொக்குவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! -3 வீடுகள் சேதம்-
யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
கூட்டமைப்பின் ஆதரவைக் கோரிய ரணில்! - அலரி மாளிகையில் நடந்த 2 மணிநேர சந்திப்பு
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமார் இரண்டு மணி நேரம்
பிரபாகரனின் படத்துடன் வாரஇதழ்- விநியோகித்தவர் கைது செய்யப்பட்டு விடுதலை
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த இதழை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவு
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவ முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட
8 ஜூலை, 2019
சுதந்திரக்கட்சிக்கு புத்துயிர்:ஆளுநர் கைகொடுத்தார்!
தெற்கில் சுதந்திரக்கட்சியா அல்லது பொதுஜனபெரமுனவா என ஆளாளுக்கு ஆட்பிடியிலிருக்க வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.
சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க பொது பலசேனா மாநாட்டில் தீர்மானம்!
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுபல சேனா கண்டியில் நேற்று
விக்கி - கஜன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி! - இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்து
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5ஜி கோபுரம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்த ஆளுநர் உத்தரவு
யாழ்ப்பாணம்- மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)