புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2019

20 லட்சம் முஸ்லிம்களையும் வெட்டி கடலில் வீச முடியாது-ஞானசார தேரர்



இந்த நாட்டிலுள்ள 20 லட்சம் முஸ்லிம் மக்களையும் வெட்டி கடலில் வீச முடியாது எனவும், இந்த நாட்டிலுள்ள இஸ்லாம் அடிப்படைவாதம் குறித்த பிரச்சினையை தீர்க்கும் அதிகாரத்தை தேரர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கங்களிடம் கூறுவோம் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அரச நிருவாகம் ஒன்றுக்கான மாறாத கொள்கையொன்றை தயாரிக்கும் தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஐந்தாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (09) கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.இந்த நாட்டில் சுதேச முஸ்லிம்கள் உள்ளனர். பாரம்பரிய, நடுத்தர முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இந்த வஹாப் வாதம் குறித்து அறிந்தவர்கள் அல்லர். இதனால், இந்த நாட்டிலுள்ள 20 லட்சம் முஸ்லிம்களையும் வெட்டி கடலில் வீச முடியாதே.

ஜம்இய்யத்துல் உலமா அமைப்புடன் மிக விரைவில் கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின், நாம் உயிரை இழக்கும் நிலைக்குச் செல்வோம்.இந்த வஹாப் வாதத்துக்கு எதிராக மக்கள் கருத்தலையொன்று எழுந்து வருகின்றது. அது மிகவும் ஆரோக்கியமான ஒரு நிலைமை.

எனவே, முதலில் தேரர்களாகிய நாம் முன்னுரிமை அடிப்படையில், இஸ்லாம் பிரச்சினை குறித்து பேசுபவர்கள் யார், யார் சுற்றாடல் பிரச்சினை குறித்து பேசுபவர்கள், தொல்பொருள் பிரச்சினை குறித்து பேசுபவர்கள் யார்? என்ற விடயங்களை பிரித்து எடுத்துக் கொண்டு ஒரு குழுவாக இருந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

ad

ad