புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஜூலை, 2019

விக்கி - கஜன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி! - இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்து

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள், இணைந்து எதிர்கால தேர்தல்களில் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை அண்மைக்காலமாக முருகர் குணசிங்கம் முன்னெடுத்திருந்தார். இதனடிப்படையில் இன்று , நல்லூரில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு முன்னதாக, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டணியில் இணைத்துக் கொள்ளக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணியினரும் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை தவிர்த்துக் கொண்டு கூட்டணி அமைப்பதற்கு தம்மால் முன்வரமுடியாது என நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வட்டாரத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உள்ளடக்கப்படும் கூட்டணிக்கு தாம் தயார் இல்லை என பதிலளித்து, இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையை இரத்துச் செய்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கனகரட்னம் சுகாஸ், விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் காண்டீபன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்கினேஸ்வரன், க.அருந்தவபாலன், பேராசிரியர் வி.சிவநாதன் ஆகியோரும் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.