புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2019

தவறான அணுகுமுறைகளால் சந்திப்பு சாத்தியமற்றுப் போனது! - விக்கி

தவறான அணுகுமுறைகளினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டணி குறித்த பேச்சு சாத்தியமாகாமல் போயுள்ளது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தவறான அணுகுமுறைகளினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டணி குறித்த பேச்சு சாத்தியமாகாமல் போயுள்ளது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும்.

எதிர்காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, இறுக்கமான ஒழுக்கவிதிகளுடன்தான் நாம் செயற்பட வேண்டும்.

புதிய கூட்டணி தொடர்பான முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. அதேசமயம் இதனால் முன்னேற்றமும் காணப்படவில்லை.

கூட்டணி விடயத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகி இருந்தது. ஆனால், தவறான அணுகுமுறைகளினால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது” என கூறினார்.

ad

ad