10 ஜூலை, 2019

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற மௌலவி ரிஐடியிடம் ஒப்படைப்பு!

நிகவெரட்டிய குற்றத்தடுப்பு பிரிவினரால் மே மாதம் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மங்சாவல பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ராஜ் கோபால் முதியங்சலகோ இஸ்மயில் மொஹம்மது நஸீர் என்பவரே தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய மதகுருவான இவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் நேற்று மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.