-
30 நவ., 2024
ரஷ்யாவின் உக்கிர தாக்குதலில் இருண்ட உக்ரைன்! [Thursday 2024-11-28 18:00]
27 நவ., 2024
ஏ9 வீதி முடக்கம் - யாழில் இருந்து கொழும்பு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
25 நவ., 2024
முடிந்தால் கொண்டுவந்து காட்டுங்கள்! அநுர அரசுக்கு பகிரங்க சவால் விடுத்த நாமல்
வடக்கு, கிழக்கை நோக்கி நகரப் போகும் புயல்! [Monday 2024-11-25 07:00]
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் இன்றிரவு அல்லது நாளை புயலாக மாறி வடக்கு கிழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ய விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் இதுகுறித்து நேற்றிரவு பதிவிட்டுள்ளார் |
21 நவ., 2024
சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டியே! [Thursday 2024-11-21 15:00]
தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிக்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். |
தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்! [Thursday 2024-11-21 16:00]
இனவாதம், மதவாதம் தலையெடுக்க இடமளியேன்! - ஜனாதிபதி அறிவிப்பு. [Thursday 2024-11-21 16:00]
பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று உரையாற்றினார் |
சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள்- உயர்நீதிமன்றில் வழக்கு! [Thursday 2024-11-21 04:00]
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கலால் சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
இலங்கையர்களின் அரசாங்கம் இப்படித் தான் இருக்குமாம்! [Thursday 2024-11-21 04:00]
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். |
துருக்கியின் அதிரடி முடிவு... அச்சத்தில் பயணத்தையே ரத்து செய்த இஸ்ரேல் ஜனாதிபதி
14 நவ., 2024
10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்
அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள்
11 நவ., 2024
சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் முதன்மை வேட்பாளர் கே வி தவராசா. யார் இந்த தவராசா? _________________________________
இனி தமிழ் தேசியக் கட்சிகள் என்ற வரிசையில் அங்கம் வைக்கும் கட்சிகளைப் பற்றி ஆராய்வோம் முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னணி பற்றி பார்ப்போம் முதல் தமிழ் கட்சியான காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பில் இணைந்த பின் மௌனித்திருந்தது விடுதலைப்புலிகள் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கிய போது அங்கே இவர்களுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டது முக்கியமாக திருமதி சிதம்பர நாதன் கஜேந்திரகுமார் கஜேந்திரன் ஆகியோருக்கு அந்த உறுப்பினர் பதவிகள் கிடைத்தன இங்கே குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ரீதியில் கையேந்திர குமாருக்கும் பல்கலைக்கழகத்தில் இருந்து பொங்கு தமிழ் ஆரம்பித்த ஒரு புரட்சி மாணவன் என்ற ரீதியில் புலிகளின் சிபாரிசில் கஜேந்திரனுக்கு இடம் கிடைத்தது போராட்டம் மௌனித்த பின்னர் கஜேந்திர குமார் அணிக்கு கிடைத்த ஆசனங்கள் போதாது என்ற ரீதியில் கூட்டமைப்பிலிருந்து முதன் முதலில் வெளியேறி தனித்து நின்று போட்டியிட்டவர்கள் இவர்கள் அன்று முதல் புலிகளுக்கு சொந்தக்காரர்கள் என்றும் மற்ற தமிழ் கட்சிகள் எல்லாம் துரோகிகள் என்றும் தாங்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு விலை போகாத கட்சி என்றும் பிரச்சாரத்தை தொடங்கினார்கள் தமிழீழம் பெற்றுத் தருவோம் என்று தொடங்கியவர்கள் இப்போது சமஸ்டியில் வந்திருக்கிறார்கள் ஏனைய முக்கிய தமிழ் கட்சிகளும் இதே சமஸ்டியை தான் வலியுறுத்துகின்றன மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் தனி நாடு என்றும் ஒரு நாடு இரு தேசம் கொள்கை என்றும் மக்களை ஏமாற்றுகின்ற வித்தையை கொண்டுள்ளவர்கள் ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கே சென்று ஒரு நாடு என்ற கொள்ளைக்கு கீழ் சத்திய பிரமாணம் செய்வார்கள் அந்த அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்து சத்தியம் செய்வார்கள் அவர்களின் தனிநாட்டுக் கொள்கைக்கு இந்த சத்திய பிரமாணம் எதிரானது முக்கியமான கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் இலங்கையில் முதல் 10 பணக்காரர்கள் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வந்து தமிழ் தமிழர் என்று கோஷமிடும் இவர் கொழும்பில் சிங்கள வங்கியில் தனது பங்கை வாங்கி வைத்திருக்கும் ஒரு முதலாளி அதாவது சிங்கள தேசத்தில் தனது முழு சொத்தையும் முதலீடு செய்துள்ள ஒரு துரோகி முதலீடு செய்யும் ஒரு முதலாளி என்றால் தமிழருக்கு உதவுவதாக அல்லது தமிழ் பிரதேசங்கள் இருப்பதான நிறுவனங்கள் அல்லது தமிழர்களின் உணர்வாழ்வை தமிழரின் வேலை வாய்ப்பை கொடுக்கக் கூடிய தமிழ் பிரதேசங்களில் முதலீடு செய்து இருக்கலாம் உண்மையான தமிழ் உணர்வு உள்ளவராக இருந்திருந்தால் இது முதல் அடி தேர்தல் முடிய வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுலா வந்து கொண்டிருப்பவர் கடைசியாக தொடர்ந்து ஆறு மாதங்கள் பாராளுமன்றத்துக்கு லீவு கேட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது கஜேந்திரன் மட்டும் என்ன செய்வார் தனியாக எங்காவது சிறு சிறு போராட்டங்களை மறியல்களை செய்து கொண்டு கட்சியை இழுத்துச் செல்கிறார் இவர்கள் மூன்று தடவை என்பியாக பாராளுமன்ற சென்றார்கள் தமிழ் மக்களுக்காக இதுவுமே செய்யவில்லை இவர்களின் கோஷத்தின் படி கொள்கையின்படி அதற்காக எங்கே என்ன செய்தார்கள் இந்த முன்னேற்றம் கொடுத்தார்கள் இவர்கள் கேட்கும் தீர்வுக்கு அல்லது கொள்கைக்கு சார்பாக இதனை பெற்றுள்ளார்கள் இப்பொழுதும் இனித்தான் பிறப்புகிறோம் இனி தான் கேட்கப் போறோம் இனி தான் கண்டுபிடிக்க போகிறோம் என்று போலி கோஷங்களை சொல்லிக் கொண்டு இருப்பவர் இவர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு மறைமுகமாகவும் நேரடியாகவும் பண உதவி செய்து கொண்டிருக்கிறது நேரடியாக புனர்வாழ்வு வாழ்வாதாரம் என்ற ரீதியில் பினாமி பெயர்களில் பணத்தினை பெற்று மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த உதவியை வைத்து தேர்தல் வரும் போது வாக்கு கேட்க செல்கிறார்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் இவர்கள் அங்குள்ள புலிகளின் அலுவலகங்களுக்கு புலிகளின் உள்ளக கூட்டங்களில் பங்கு பற்றி அவர்களின் மண்டையை கழுவி நிதியினை கேட்டு வருகிறார்கள் புலிகளும் உணர்ச்சிவசமான அரசியலுக்கு ஆசைப்பட்டு இவர்களிடம் அவிந்து விடுகிறார்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிய தமிழ் கட்சிகள் பிளவு பட்டிருப்பது நாள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் ஆட்சி அமைக்க தேவையான வாக்குகளுக்கு தமிழரசு கட்சி காத்திருக்கும் உங்களை அவர்கள் காலை வாரிவிட்டு பிரபலமான தமிழ் துரோக கட்சியான இபி டி பி க்கு ஆட்சி போகும் வகையில் வாக்களிக்கிறார்கள் இவர்கள் எப்படி தமிழ் தேசியக் கட்சி என மக்கள் அங்கீகரிக்க முடியும் தமிழரசு கட்சியை எதிர்க்க வேண்டும் தமிழரசு கட்சியை விடக்கூடாது தமிழரசு கட்சி சபைகளில் ஆட்சி அமைக்க கூடாது என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள் அதற்காக அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இ பி டி பி கட்சிக்கும் டக்ளசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்களிப்பில் துணை நின்றவர்கள் வேலணை யாழ்ப்பாணம் நல்லூர் சாவகச்சேரி போன்ற இடங்களில் இவர்களது கைவரிசையில் இபிடிபி ஆட்சி அமைத்த வரலாறு உண்டு இவர்களை தமிழ் தேசிய கட்சி என்று மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் தேர்தலுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் தலை காட்டுவார் தவிந்த நேரங்களில் கொழும்பிலும் வெளிநாடுகளும் உல்லாசமாக வாழ்ந்து திரிபவர் மக்களோடு மக்களாக வாழ்பவரோ மக்களின் குறைகளை வடக்கு கிழக்கு சென்று கவனிப்பாரோ கேட்டுத் தெரிந்து கொள்பவரோ தீர்வு காண்பவரே அல்ல இதனை விட இவர்கள் பிரதேச வாதத்தை விதைப்பவர்கள் முக்கியமாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்க அதனை உண்மையான வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் இனத்தை நேசிப்பவர்களாக இருந்தால் கிழக்குக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் விஷயம் என்னவென்றால் கையேந்திரனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக பிரிந்து சென்றவர்கள் கையேந்திரன் தோல்வி கண்டபோது அவருக்கு எம் பி பதவி கொடுத்து சமாளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்த இடத்தினை கயேந்திரனுக்கு கொடுத்திருந்தார் இதே நிலையில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை தமிழரசு கட்சி அம்பாறைக்கு ஒரு தமிழ் பிரதிநிதி வேண்டும் என்ற நிலையில் வழங்கி கௌரவித்தார்கள் இந்த இடத்தில் தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு இணைந்த தாயக தேசிய கட்சி என்பதை நிரூபித்திருக்கிறார் முக்கியமாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வி கண்ட நிலையில் அவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் உண்மையில் மாவை அந்த இடத்தை தியாகம் செய்து அம்பாறைக்கு விட்டுக் கொடுத்தார் மாவை சேனாதி இரண்டாவது தியாகம் இது முதலில் கொழும்பில் இருந்து வந்த விக்னேஸ்வரனை மாகாண முதல்வராக ஆக்க எண்ணி அந்த இடத்திலேயே விட்டுக் கொடுத்த ஒரு தியாகி மாவை சேனாதிராசா
4 நவ., 2024
கருணா கட்சி வேட்பாளர், ஆதரவாளர்களை புரட்டியெடுத்த பிள்ளையான் குழு! [Monday 2024-11-04 05:00]
மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர் |
ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? [Monday 2024-11-04 05:00]
ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார் |
சேறு பூசுகிறார் சுமந்திரன்- பொலிஸ் நிலையத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் புகார்! [Monday 2024-11-04 05:00]
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலதான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் |