புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2019

சுதந்திரக்கட்சிக்கு புத்துயிர்:ஆளுநர் கைகொடுத்தார்!

தெற்கில் சுதந்திரக்கட்சியா அல்லது பொதுஜனபெரமுனவா என ஆளாளுக்கு ஆட்பிடியிலிருக்க வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்று திங்கட்கிழமைமுற்பகல் யாழ் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது.


மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவத்தின்கீழ் செயற்பட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்படவேண்டுமென்று அப்போது ஆளுநர் வலியுறுத்தியதாக தெரியவருகின்றது. அதை நோக்காக முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு பிரதேச சபைகளின் ஊடாக உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாகவும் அப்போது ஆளுநர் குறிப்பிட்டுள்ளாராம்.


இதேவேளை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச சபைகளின் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில் அங்கயன் இராமநாதன்,அமைச்சர் காதர் மஸ்தான் போன்றவர்களும் பங்கெடுத்திருந்தனர்.


வடக்கு ஆளுநரை ஜனாதிபதி மைத்திரியே நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad