ஐ.நா-வின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையை செய்ய இலங்கை அரசிற்கு உதவியாக நின்றது அம்பலமாகி உள்ளது
1. இனப்படுகொலைக்கு 3 நாட்களுக்கு முன்பே (15-05-2009) இனப்படுகொ
லை நடக்கப் போகிறது என இனப்படுகொலைக்கான தடுப்பு ஆலோசகர் பிரான்சிஸ் டெங் எச்சரிக்கை செய்து அறிக்கை அனுப்புகிறார். இது புறக்கணிக்கப்படுகிறது. இதன் மீது இதுவரை விவாதம் நடத்தவில்லை.
2. இலங்கைக்கான ஐ.நா-வின் உயர் அதிகாரி ஜான் ஹோம்ஸ் என்பவர் இனப்படுகொலை நடந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் “அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலேயே அழித்து விடுவேன்” என சொல்கிறார்.
3. ஐ. நா தலைவர் பான் கீ மூனின் உதவியாளர் மிச்சல் மோண்டாஸ் போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என கேட்டதற்கு “ உடல்களை எண்ணுவது எங்கள் வேலையில்லை” என்றார். ஆனால் பாலஸ்தீனம், சிரியா முதல் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற புள்ளி விவரங்களை ஐ.நாவே வெளியிடுகிறது,
4. போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியார் இனப்படுகொலை நடந்த நாள்களில் கொழும்பு நகரினை விட்டுவெளியேறவில்லை. ஏன் என கேட்டத்ற்கு “வெளியே தட்பவெப்பம் சரியில்லை” எனக் கூறினார்.
5. எந்த ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் அண்டை நாட்டினை சேர்ந்தவரை அங்கு அனுப்புவது இல்லை என்னும் ஐ. நாவின் விதியினை மீறி இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் அதிகாரி விஜய் நம்பியாரை மிக முக்கியப் பொறுப்பில் நியமித்தார் பான் கீ மூன். விஜய் நம்பியாரின் உடன்பிறந்த தம்பி சதீஸ் நம்பியார் தான் இலங்கையின் ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசகராக போரில் ஈடுபட்டு இருந்தார்.
6. உலக அளவில் இனப்படுகொலையை தடுப்பதில் செயல்பட்ட இலங்கைக்கான ஐ.நாவின் அதிகாரி சார்லஸ் பெட்ரியை 2008இல் இலங்கையை விட்டு வெளியேற்றினார்கள்.
7. இனப்படுகொலை முடிந்த பிறகு ஐ.நாவின் மனித உரிமைக்கான தலைவர் நவிபிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற போது அதை கடுமையாக எதிர்த்து தடுத்தவர்கள் பான் கீ மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ். உள் நாட்டு விசாரனை (அதாவது குற்றவாளியே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்) மட்டுமே போதும் என்கிற இந்தியாவின் கோரிக்கையை முன் நகர்த்தினார்கள்.
ஐ.நா வின் முகத்திரை கிழிக்காமல் ஈழம் சாத்தியமில்லை, போதுவாக்கெடுப்பை தவிர வேறெதற்கும் சமரசமில்லை.