புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2012


தேமுதிகவுடன் கூட்டணி அமையும்: கே.என்.நேரு பேச்சு 
திருச்சியில் வரும் 15-ந் தேதி நடக்கவுள்ள திருச்சி பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது.


 திருவெறும்பூர் பெல் தொ.மு.க. அலுவலகத்தில் அவை தலைவர் பரமசிவம் தலைமையில் நடந்த திருவெறும்பூர் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ’’சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்வின் மகன் அபிஷேக் யாதவ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது கூட்டங்களில் மக்கள் முன் பேசி ஆட்சியை பிடித்தார். 
அதுபோல நமது பொருளாளர் ஸ்டாலினும் தண்ணீரும், மின்சாரமும் இல்லாத தமிழ் நாட்டின் அவல நிலையை பற்றியும், மக்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாக மாறிபோகும் நிலை பற்றியும் தமிழகமெங்கும் பேசி வருகிறார். தலைவர் கலைஞரை பொருத்தவரை தன்னால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் அரசை கவிழாமல் காப்பாற்றவே சில்லறை வர்த்தகத்தில (எப்டிஐ) அன்னிய நேரடி முதலீட்டிற்கான வாக்கெடுப்பில் மத்திய அரசை வெற்றி பெற செய்தார். 
சிலர் இதை காங்கிரசை கண்டு தி.மு.க. பயப்படுவதாக கூறுகின்றனர். அப்படி பயந்திருந்தால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை விலக்கிவிட்டு தி.மு.க. தனித்து போட்டி போட்டு இருக்குமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி உண்டா? என்கிற கேள்விக்கு தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என விஜயகாந்த் பதில் தந்துள்ளார். பார்க்கலாம் என்கிற வார்த்தைக்கு கூட்டணி உண்டு என்பதுதான் அர்த்தம். தி.மு.க. தொண்டர்கள் ஸ்டாலினை வரவேற்கவும், பாராளுமன்ற தேர்தலுக்கும் தயாராகுங்கள்’’ என பேசினா

ad

ad