புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2012


64ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்றுகொழும்பில் அரசுக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம்இடம்பெற்றது.
பிரதமநீதியரசருக்குநியாயம் கிடைக்கவேண்டும்என்றும்அவருக்குஎதிரான குற்றப்பிரேரணை,தெரிவுக்குழுவிசாரணைகள் ஆகியவற்றைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள்,தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம்ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
லிப்டன் சுற்று வட்டாரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்காரணமாகஅதனை
 அண்டிய வீதிகள் அனைத்தும்மூடப்பட்டனஇதனால் நகரமண்டபப் பகுதியில் நேற்றுபெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுவீதிப் போக்குவரத்தும்தடைப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில்ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கபிரதித் தலைவர் சஜித்பிரேமதாஸகரு ஜயசூரிய ஆகிய நாடாளுமன்றஉறுப்பினர்களும்நவசம சமாஜக் கட்சித் தலைவர் கலாநிதிவிக்கிரமபாகு கருணாரட்ணஜனநாயக மக்கள்முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன்ஆகியோரும்பொது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும்கட்சிப் பிரதிநிதிகளும்தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்சட்டத்தரணிகள் சங்கத்தினரும் இதில் கலந்துகொண்டனர்.
அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்கிலும்,இது விடயத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கிலும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதித்துறையை நிறைவேற்றுத்துறை தமதுகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறதுபிரதமநீதியரசருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்,தெரிவுக்குழுவின் முடிவை ஏற்க முடியாது என்றுதெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர்.
அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசுபிரதம நீதியரசரைப் பதவி இறக்க முயற்சிக்கிறது என்றுஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட .தே..துணைத்தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ் சாட்டினார்.
நாட்டை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேநீதித்துறையின் சுதந்திரத்தை அரசு ஒடுக்க முனைகிறதுஎன இலங்கைக் கத்தோலிக்க மன்றத்தைச் சேர்ந்தஅருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்.

ad

ad