புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012


தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைக்க 9 கட்சிகள் கூட்டாக பேச முடிவு
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் முடிவு செய்துள்ளன. 
அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்னியூஷ்ட் கட்சி,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி,
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,
அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ்,
அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,
மலையக மக்கள் முன்னணி,
சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமஷமாஜ கட்சி
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி
ஆகிய 9 கட்சிகள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இந்த குழுவின் கூட்டம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad