புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012


யாழ். மாநகர சபையின் ஆளும் கட்சியான ஈ.பி.டி.பி யினரால் ஆறு கோடிக்கும் அதிகமான நிதியானது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் ஏழு மாநகரசபை உறுப்பினர் கூட்டாக தெரிவிக்கையில்,
யாழ். மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை கூட்டமைப்பினராகிய நாம் நிராகரிக்கின்றோம். இவ்வரவு செலவுத்திட்டமானது, நடைமுறைக்கு புறம்பான வருமானங்களைக் கொண்டுள்ளது.
அதேபோல் மாநகர சபையின் வருமான பல கோடிக்கணக்கான நிதியானது கணக்கில் காட்டப்படவில்லை. இவற்றில் பல கோடிகளை மாநகரசபை மேயர் தனது வீட்டிற்கு கொண்டு போய்விட்டார். மக்களின் மீது தேவையற்ற வரிச்சுமைகளை சுமத்துகின்றனர் என தெரிவித்துள்ளனர்

ad

ad