புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2012


சூடானில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டகழுகொன்றை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
குறித்த கழுகானதுஇஸ்ரேல் நாட்டைச்சேர்ந்ததென சூடான்நாட்டு அதிகாரிகள்குற்றஞ்சாட்டியுள்ளனர்சூடானின் டாபூர் பிராந்தியத்தின்கிரிநெக் நகரில் வைத்தே இக் கழுகு பிடிபட்டுள்ளது
.
கழுகின் காலில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும்,ஜி.பி.எஸ் தொழிநுட்பம் கொண்டதும் செய்மதியின் ஊடாகபடங்களை அனுப்பக்கூடியதுமான சிறிய சாதனமொன்றும்கட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
மேலும் அதன் காலில் "Israel Nature Service" and "Hebrew University, Jerusalem" என்று பொறிக்கப்பட்டஅட்டையொன்றினையும் கழுகின் காலில்தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இக்குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் மறுத்துள்ளது.இக் கழுகானது நாளொன்றுக்கு சுமார் 375 மைல்கள்பயணிக்கக் கூடியது என்றும் இதன் இடப்பெயர்வுதொடர்பான ஆராய்சிக்கெனவே இதனை அனுப்பியதாகதெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இதே போன்றதொரு கழுகு சவுதிஅரேபியாவில் வைத்து பிடிபட்டதுஅதுவும் உளவுபார்க்கும் முகமாக இஸ்ரேலினால் அனுப்பப்பட்டதாகஅந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அதன்போது இஸ்ரேல் அக்குற்றச்சாட்டைதற்போது தெரிவித்துள்ள அதே காரணத்தைக் கூறிநிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad