புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2012


இந்த ஆண்டில் 86 கோல்கள்: கால்பந்து வீரர் மெஸ்சி சாதனை
இந்த ஆண்டில் 86 கோல்கள்: கால்பந்து வீரர் மெஸ்சி சாதனை

அர்ஜென்டினா அணியின் முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயனில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த ரியல்பெடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சி 2 கோல் அடித்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். 


2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி இந்த ஆண்டில் மொத்தம் 86 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு ஜெர்மனி வீரர் ஜெரால்டு முல்லர் 1972-ம் ஆண்டு 85 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 

மெஸ்சி பார்சிலோ அணிக்காக ஆடி 74 கோல்களையும், அர்ஜென்டினா அணிக்காக 12 கோல்களையும் இந்த ஆண்டு அடித்துள்ளார்.

ad

ad