புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012


பிரதம நீதியரசருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன: அரசாங்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதனை பிரதம நீதியரசரை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் ஐந்து குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒன்று நான்கு ஐந்து என்ற குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த விடயங்கள் வெளியிடப்பட்டன.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை பிரதம நீதியரசர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்திருக்காவிட்டால், அவருக்கு பதில் வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்க ஆர்.சம்பந்தனை தவிர்ந்த ஏனைய 10 தெரிவுக்குழு உறுப்பினர்களும் தயாராக இருந்ததாக தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
பிரத நீதியரசர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய முழு வடிவம் - இங்கே அழுத்துங்கள்

ad

ad