புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012


எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவசர அவசரமாக திறந்தது ஏன்? : கலைஞர் பதில்

கலைஞர் தலைமையில் புதுச்சேரி, புதுச்சேரி- காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று  மாலை  அண்ணா
அறிவாலயம் - ‘முரசொலி மாறன் வளாக’ கூட்ட அரங்கில்  நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் மற்றும் புதுச்சேரி மற்றும் புதுச்சேரி - காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தார் கலைஞர்.
புதுச்சேரி  -  காரைக்கால் உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கிறீர்கள்?
யாருடன்  கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்க நாங்கள் இப்பொழுது ஒரு குழுவை அமைத்திருக்கிறோம். அவர்கள் விவாதித்து  முடிவு செய்து, தலைமைக் கழகத்திற்கு  அந்த முடிவை அறிவிப்பார்கள்.
அக்குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள்? 
புதுவைக்கு ஒரு குழுவும் - காரைக்காலுக்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.  குழுவின் இடம் பெறுவோர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
புதுவை மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஏற்கனவே தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்திருக்கிறாரே?
அதைப் பற்றியெல்லாம் புதுவையிலே நாங்கள் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றோர் பேசி முடிவெடுப்பார்கள்.
வேட்பாளர் பட்டியல் எப்பொழுது வெளியிடுவீர்கள்?
வேட்பாளர் பட்டியல் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவசர  அவசரமாக இன்று மதியம் திறந்து வைத்திருக்கிறார்களே?
அ.தி.மு.க.வின்  தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை  அரசு  சார்பாக நடத்துகிற ஒரு  கட்டிடத்தில் அல்லது  ஒரு மண்டபத்தில் வைப்பதை ஆட்சேபித்து சிலர் வழக்கு தொடுத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.  அதற்காக அவசர அவசரமாக திறந்திருக்கக் கூடும்.

ad

ad