அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா-மிட்ரோம்னி இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள்