புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012


பிரிவார்களா? இணைவார்களா? எப்போது முடியும் வைகோ, நாஞ்சில் சம்பத் விவகாரம்!


வைகோ, நாஞ்சில் சம்பத் பிரிவார்களா? இணைவார்களா? என கடந்த ஒன்னரை மாதங்களாக நடக்கும் இந்த கசமுசாவின் முடிவு எப்போது என காத்திருக்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

தி.மு.க.வின் பேச்சாளராக அறிமுகமான நாஞ்சில் சம்பத், வைகோவின் தீவிர விசுவாசி. திமுகவை விட்டு வைகோ வெளியே வந்தபோது அவரோடு சென்றவர். ம.தி.மு.க விலும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பதவியை தவிர வேறு எந்த மக்கள் பிரதிநிதி என்ற எந்த பதவிக்கும் போட்டியிடாதவர். பேச்சு பேச்சு இதை மட்டுமே மூச்சாக கொண்டிருந்தவர்.

இப்போது, ம.தி.மு.க விட்டு வெளியேறுவாரா...? அல்லது வெளியேற்றப்படுவாரா...?  என்று அந்த கட்சியின் தொண்டர்கள் பலரும் குழம்பிப்போய் உள்ளார்கள். வைகோவுக்கும், நாஞ்சில் சம்பத்துக்குமான இந்த மோதலின் பின்னணி என்ன என்று விசாரித்தோம். ஆரம்பம் முதலே, கட்சியில் வைகோவுக்கு அடுத்ததாக தான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் சம்பத் நடந்து வருகிறார்.

சிறந்த பேச்சாளர்களை கொண்டிருந்த ம.தி.மு.கவில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும் போராட்டங்களுக்கும் பொதுக்கூடங்களுக்கும் கட்சி பலம் இல்லாத இடங்களுக்கும், கூட்டம் சேராத இடங்களுக்கும் புதுக்கோட்டை பாவாணன், சபாபதிமோகன் போன்ற பேச்சாளர்களை அனுப்புவார். தான் மட்டும் கூட்டம் சேரும் இடங்களுக்கு சென்று வருவார்.

பாவாணனின் பேச்சில் ஈழத்தமிழர் பற்றியும், விடுதலைபுலிகளை பற்றியும் தான் அதிகம் பேசுவார், ஆனால், நாஞ்சில் சம்பத் ஈழம் பற்றியும், விடுதலைபுலிகள் பற்றியும் பேசவேமாட்டார்.

இந்த வகையில், ம.தி.மு.கவினர் பாவாணனை அதிக கூட்டங்களுக்கு கூப்பிடத் துவங்கியதும், அவருக்கு எதிரான சில வேலைகளை செய்து அவரை கட்சியை விட்டு வெளியேற்ற வழிவகை செய்தார்.

அது போலவே, மிகச்சிறந்த கல்வியாளரான சபாபதி மோகன் அவர்களுக்கும் சரியான இடங்களை கொடுக்காமல், பல இடங்களில் மோசமாக விமர்சனம் செய்து பேசியதால் தான் அவரும் கட்சியை விட்டு வெளியேறினார்.

சமீப காலமாக கட்சி எடுக்கும் எல்லா முடிவுகளும் தன்னுடைய விருப்படிதான் நடக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் சம்பத். அப்படி இல்லையென்றால் குழப்பங்களை ஏற்படுத்தவும் துவங்கிவிட்டார்.

வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையிலிருந்து வந்ததும், திமுக வுடன், ம.தி.மு.க  நல்ல இணக்கமான நிலையில் இருந்து வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலேயே நீடித்தது, 2006-சட்ட மன்றத்தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே ம.தி.மு.க தொடரும் என்று மதிமுக தொண்டர்கள் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு சிலநாட்கள் முன்னர் திருச்சியில் நடந்த தி.மு.க மாநாடுக்கு பத்து நாட்கள் முன்பு சென்னை தாம்பரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலைஞரையும் கடுமையாக விமரிசனம் செய்து பேசினார் நாஞ்சில் சம்பத்.

இதனால், கலைஞர் உட்பட தி.மு.க-வின் கடைநிலை தொண்டர்கள் மத்தியிலும் ம.தி.மு.க மீது ஒரு மோசமான அபிப்பிராயம் ஏற்ப்பட்டது. இதன் பின்னர் தான் வைகோ தி.மு.க மாநாட்டுக்கு செல்லாமல், அ.தி.மு.க-வோடு கூட்டணிக்கு போனார். அதற்கு, சம்பத்தும் ஒரு காரணமாக இருந்தார்.

அடுத்து, 2011-சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அதே தாம்பரத்தில், அதிமுக வையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அடுத்து, நடந்த ம.தி.மு.க. பொதுக்குழுவில் தனக்கு வேண்டிய சில ஆட்கள் மூலம் ஜெயலலிதாவை கேவலமாக விமர்சனம் செய்தும், அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பேசவைத்தார். வைகோ உட்பட பலர் தடுத்தும், நாஞ்சில் சம்பத் ஏற்பாடு செய்திருந்த அந்த ஆட்கள் காட்டமாக ஜெயலலிதாவை தாக்கி பேசினார்கள்.

இதனால், ம.தி.மு.க-வுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்யாமல், அதிமுக தொகுதிகளை அறிவித்ததும், ம.தி.மு.க தேர்தலில் போட்டியிடாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்படவும் சம்பத் காரணமாக இருந்தார்.

அதேபோல, வைகோவுக்கு ஆதரவான நிலையிலிருந்த இயக்குனர் சீமானை தேவையில்லாமல் பேசி அவரை ம.தி.மு.க-வுக்கு எதிரானா நிலையை எடுக்க 

காரணமாக இருந்ததும் சம்பத் தான் என்கின்றனர் மதிமுக பொறுப்பாளர்கள். இந்த இரண்டு பிரச்சனைக்கும், காரணமான தாம்பரம் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து கொடுத்த தாம்பரம் நகர ம.தி.மு.க செயலாளர் குபேரா ஜெய்சங்கர் என்பவர் நாஞ்சில் சம்பத்தின் தீவிர ஆதரவாளர்.

அ.தி.மு.க, ம.தி.மு.க-வுக்கு தொகுதிகளை ஒதுக்காமல், தன்னுடைய தொகுதிகளை அறிவித்தவுடன்,  தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை என பல இடங்களில் தன்னுடைய தலைமையில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்து அதை பத்திரிகைகளில் படத்துடன் வரவைத்துள்ளார் குபேரா ஜெயசங்கர்.

இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில், தாம்பரம் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். ஆனால், அ.தி.மு.க வேட்பாளர் கரிகாலனுக்கு ஆதரவாக தன்னுடைய வேட்புமனுவை கடசி நேரத்தில் வாபஸ் வாங்கியுள்ளார்.  கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக இவரை அடுத்தநாளே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார் வைகோ.

குபேரா ஜெய்சங்கரை கட்சியை விட்டு நீக்கியது சம்பத்துக்கு பெரிய வருத்தம், தான் கூட்டத்துக்கு போகும் இடங்களில் எல்லாம் குபேரா ஜெய்சங்கரை பெரிய அளவில் புகழ்ந்து பேசிவந்த சம்பத்திடம் இப்போது, கட்சிக்கார்கள் யாராவது குபேராவை கட்சியை விட்டு நீக்கப்பட்ட விசாயத்தைப்பற்றி கேட்டால், அதற்கு ஒரு அடைமொழியுடன் வைகோவை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருகிறார் என்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாகவே, சம்பத்தை பற்றி பெரும்பாலான கட்சி பொறுப்பாளர்கள் வைகோவிடம் குறைபட்டு கூரியத்தை தொடர்ந்து நாஞ்சில்  சம்பத்திடம் வைகோ இப்போது, கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்.

இதே நேரத்தில், ம.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட குபேரா ஜெய்சங்கர் இப்போது, அ.தி.மு.கவில் ஐக்கியமாகி இருக்கிறார். தாம்பரம் நகரமன்றதலைவர் கரிகாலனுக்கு இடது கரமும், வலது கரமும் இந்த ஜெயசங்கர் தான்.

அவர் மூலம் சம்பத்தை அ.தி.மு.கவுக்கு இழுக்கும் முயற்சியும் கொஞ்ச நாட்களுக்கு துவங்கியுள்ளது. அடுத்த தேர்தலுக்கு எப்படியும் வைகோவும் அ.தி.மு.க 

கூட்டணிக்குத்தான் போவார். அப்போது, நமக்கு சரியான மரியாதை இருக்காது என்பதால் நாஞ்சில் அமைதியாக இருக்கிறார் என்று  சொல்லுகிறார்கள்.

இந்த நிலையில் வைகோவுக்கும் சம்பத்துக்கும் இடையில் இருந்த விரிசல் அதிகமாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த புகைச்சல் இருந்தாலும், 

வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருந்தும் இருவரும் சந்தித்துகொள்ளவில்லை. 

இலங்கை அதிபர் ராசபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது மகாராஷ்டிர மாநில எல்லையில் வைகோ உட்பட மதிமுகவினர் உட்காந்திருந்தபோது, நாஞ்சில் சம்பத் இருந்தால் பொழுது போவது தெரியாது என்று கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் சொல்ல, அவரைத் தவிர இங்கிருக்கிற யாரும் உனக்கு தெரியலையா? என்று வைகோ காட்டமாக கேட்டுள்ளார். அதேபோல, சமீபகாலமாக கட்சிகாரர்களிடமும், நண்பர்களிடமும் பேசும்போது, வைகோவை அடை மொழியுடனே சம்பத் பேசிவந்துள்ளார். 

நீ முதலில், நான் முதலில், என்ற கணக்கின்படி யார் முதலில் பேசுவது என்று இருந்த இந்த சிக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முடிந்துள்ளது. நாஞ்சில் சம்பத், வைகோவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார்.

இப்போது வேண்டாம், அடுத்த வாரத்தில் சில திருமணங்கள் உள்ளது அதில் ஏதாவது ஒரு இடத்தில் நாம் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார் வைகோ. அதற்கு ஏற்ற இடமாக குமரி மாவட்டம், குளச்சல் நகர செயலாளர் டார்வின் தம்பிராஜ் மகன் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. அந்த திருமணத்தில், நாஞ்சில் சம்பத்தை சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், வைகோ அந்த சந்திப்பை தவிர்த்து விட்டாராம்.

அத்தோடு, நாஞ்சில் சம்பத் பேசுவார் என்று மதிமுகவின் சார்பில், அறிவிக்கப்பட்டிருந்த சில பொதுக்கூட்டங்களை அந்த கட்சியினர் ரத்து 

செய்துள்ளனர்.

நாஞ்சில் சம்பத் தன்னை சந்திக்கவிரும்புவதை  வைகோ தவிர்த்ததுடன், ஏற்கனவே ஏற்பாடு செய்யபட்டிருந்த நீக்கபடுவதையே காட்டுகிறது.

சம்பத்தின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் விசாரித்த வகையில், சம்பத் தனிப்பட்ட முறையில், எல்லோரை பற்றியும் கிண்டலடித்தும், விமர்சித்தும் போசுவார்,  ஆனால் மேடையில் உயர்வாக பேசுவார் அதுதான் அவரிடம் உள்ள குறை. மற்ற படி இந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிக்கும் ஓடிப்போய் பிழைப்பு நடத்த அவர் அரசியல் வாதியல்ல. சிறந்த பேச்சாளர். தமிழ், இலக்கியம், வரலாறு, கலை, பண்பாடு என பல துறைகளையும் கற்றறிந்தவர்.

அரசியல் பேசி சம்பாதிப்பதை விடவும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சம்பத் பேசினால் இன்னும் அதிகம் சம்பாதிக்க முடியும்,  பக்தி இலக்கியத்தில், இன்னும் கிருபானந்த வாரியாரின் இடம் காலியாகவே உள்ளது என்று பல முறை வருத்தப்படிருக்கிறார். ஒருவேளை நாஞ்சில் சம்பத் அந்த இடத்துக்குபோனாலும் போகலாமோ தவிர வேறு கட்சிகளுக்கு போகமாட்டார் என்கிறார்கள்.

இந்த நேரத்தில், மீண்டும் குபேரா ஜெயசங்கர் தாம்பரத்தில் நாஞ்சில் சம்பத்துக்காக ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் நாஞ்சில் சம்பத் மனதில் உள்ளதை வெளியிடுவார் என்று மதிமுகவினர் எதிர்பார்கிறார்கள்.

ad

ad