டக்வெல்த் லூயிஸ் முறையில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபதுக்கு 20, ஐந்து ஒரு நாள் போட்டிகள்
மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கின்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான பல்லேகளேயில் இடம்பெற்ற இருபதுக்கு20 போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு போட்டித் தொடரில் இம்மாதம் முதலாம் திகதி பல்லேகளேயில் இடம்பெறவிருந்த முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
கொழும்பில் இடம்பெறவிருந்த இரண்டாவது போட்டி மழைகாரணமாக பல்லேகளேயில் இடம்பெறபோவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் நிகோல் (46), வெட்லிங் (55), டெய்லர் (72), பிரேங்கிளின் (35) ஓட்டங்களை பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க இரு விக்கெட்டுகளையும், குலசேகர, மெத்தியூஸ், பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 251 என்ற வெற்றி இலக்கை அடைய பதிலெடுத்தாடிய இலங்கை அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனையடுத்து தொடர்ந்து மழை பெய்துக்கொண்டிருந்தமையால் டக்வெல்த் லூயிஸ் முறை அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை 22.5 ஓவர்களில் 105 ஓட்டங்களை பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இலங்கை அணி குறிப்பிட்ட ஓவர்களில் வெற்றி இலக்கை விட 14 ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தமையால் இலங்கை வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் மில்ஸ், போல்ட், மெக்கலம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக மாலிங்க தெரிவு செய்யப்பட்டார்.