புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாளை வாக்குப்பதிவு
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பதவி அமெரிக்க ஜனாதிபதி பதவி. அமெரிக்காவை ஆள்வது மட்டும் இன்றி பிற நாடுகளிலும் அதிகாரம் செலுத்தும் சக்தி கொண்டது அந்த பதவி. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின்
முதலாவது திங்கட்கிழமைக்கு பிறகு வரும் முதலாவது செவ்வாய்க்கிழமையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். 

தற்போது ஜனாதிபதியாக இருந்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்து ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய இருப்பதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னி நிறுத்தப்பட்டு உள்ளார். இருவரும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்து வந்தனர். டெலிவிஷனில் நேரடி விவாதமும் நடத்தினார்கள். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் ஒபாமாவுக்கு சில மாநிலங்களிலும், மிட் ரோம்னிக்கு சில மாநிலங்களிலும் அதிக ஆதரவு உள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகையில் 22 சதவீதம் மக்களை கொண்ட நெவடா, கொலராடோ, லோவா, விஸ்கான்சின், ஓயோ, நியூஹாம்ஷைர், விர்ஜினியா, வடகரோலினா, புளோரிடா ஆகிய 9 மாநிலங்களின் வாக்குகள் தான் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் என்று கருதப்படுவதால், இருவரும் அந்த மாநிலங்களின் தேர்தல் சபை வாக்குகளை பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். இருவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்தனியாக தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையான மக்கள் வாக்குகளை யார் பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் வழங்கப்படும்.

இவ்வாறு தேர்ந்து எடுக்கப்படும் தேர்தல் சபை உறுப்பினர்கள் பின்னர் கூடி அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பார்கள். யார் அதிக தேர்தல் சபை வாக்குகளை பெறுகிறாரோ. அவர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இதில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் ஜனாதிபதி ஆவார்.

தேர்தல் சபைக்கு தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்கள் டிசம்பர் மாதத்தில் கூடி புதிய ஜனாதிபதியையும், துணை ஜனாதிபதியையும் தேர்ந்து எடுப்பார்கள். இந்த முடிவுகள் ஜனவரி 6-ந் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும். புதிய ஜனாதிபதி ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பார்.

ad

ad