புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012

தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும் : மல்வத்தை மகாநாயக்க தேரர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கும் நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை மகாநாயக்க தேரரிடம் நல்லாசி பெறச் சென்றபேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுமக்கள் விரும்பாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அத்துடன் தற்போதைய தேர்தல்முறை, மாகாண சபை முறைமைகள் மற்றும் விருப்பு வாக்கு முறைமை போன்றவை நாட்டிற்குப் பொருத்தமற்றவை.

மக்கள் வேண்டாம் என்பதை தொடர்ந்து வைத்துக்கொண்டு இருப்பதால் நாட்டிற்கு அது மேலுமொரு பிரச்சினையாக அமைந்து விடும் என்பதுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கும் நியாயமான ஒரு தீர்வு வழங்கப்படவேண்டும். அதேநேரம் அபிவிருத்தி என்ற போர்வையில் தேவையற்றவைகளை தவிர்த்துக் கொள்வது நல்லதெனத் தெரிவித்தார்

ad

ad