புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012


90 சதவீத தே.மு.தி.க.வினர் என் பக்கம்: ஜெயலலிதாவை மீண்டும் சந்திப்பேன்: மைக்கேல்ராயப்பன்
 
தே.மு.தி.க.வை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் உள்பட 4  எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
 

இந்த நிலையில் ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் இன்று (04.11.2012) காலை ரெயில் மூலம் நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்த பாடுபட்டு வருகிறேன். இங்குள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தேன்.

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வரை சந்தித்தில் தவறு ஒன்றுமில்லை. இப்போதும் நான் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாகவே நீடிக்கிறேன். எனது தொகுதியில் 90 சதவீதம் தே.மு.தி.க.வினர் என் பக்கம் இருக்கிறார்கள். எனது முடிவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கட்சி தலைமை என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலர் என்னை துரோகி என்று கூறியிருக்கிறார்கள். நான் மக்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதற்காக மக்கள் பக்கம் இருக்கிறேன்.

தே.மு.தி.க. கட்சி தலைமை என்னை சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய முதல்வரையோ, அமைச்சர்களையோ,  அரசு துறை அதிகாரிகளையோ சந்திக்க அனுமதி மறுத்தனர். அவர்களது விழாக்களில் கலந்து கொள்ளகூடாது என்றனர்.

எனவேதான் தமிழக முதல்வரை தனியாக சென்று சந்தித்தோம். எனக்கு வாக்களித்த மக்கள் நலன்தான் முக்கியம். ராதாபுரம் தொகுதியில் திசையன்விளையை தனி தாலுகா ஆக்குவது, ராதாபுரத்திற்கு அரசு ஐ.டி.ஐ. கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொடுத்துள்ளேன்.

அந்த கோரிக்கைகளை கனிவோடு கேட்ட முதல்வர் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார். மீண்டும் தேவைப்பட்டால் முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மைக்கேல் ராயப்பன் வருகையையட்டி ரெயில் நிலையம் முன்பு மாநகர போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ad

ad