புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2012

உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள நவுரு தீவு புகலிடக் கோரிக்கையாளர்கள்
நவுரு தீவுகளில் உள்ள 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளிற்கு நாள் மாறுபடுவதன் காரணமாக, 
உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள நவுரு தீவு புகலிடக் கோரிக்கையாளர்கள்
அவுஸ்ரேலியா நவுரு தீவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 

எத்தனை பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றிய சரியான புள்ளி விபரங்களை குறிப்பிட முடியாதுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நவுரு தீவு முகாம் ஒர் மனநல காப்பகம் போன்று அமைந்திருப்பதாக புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த முகாம்கள் மனிதர்கள் வாழப் பொருத்தமற்றது என சில புகலிடக் கோரிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad