புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கினால் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் நிதி அதிகாரங்களைத் தவிர்ந்த காணி, காவல்துறை உள்ளிட்ட சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும், மத்திய அரசாங்கத்திற்கே கூடுதல் அதிகாரங்கள் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளினால் பயன்படுத்த முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு வழங்காவிட்டால் இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமை குறித்து அறிவிக்க நேரிடும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ad

ad