26 ஜன., 2019

தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?

மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டது. இதனை தொடா்ந்து அந்தப் பகுதியில் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவை போர்க்­கா­லத்­தில் இரா­ணு­வத்­தால் கொன்று புதைக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் எலும்­புக்­ கூ­டு­கள் என்று கரி­சனை கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை இரா­ணு­வத்­துக்­கும், புலிகளு க்­கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறு­திப் போரில் ஏரா­ள­மான தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­தாக முறைப்­பா­டு­கள் எழுந்­தன. இறு­திப்­போ­ருக்கு முன்­ன­ரும் வடக்கு மா கா­ணத்­தில் ஏரா­ள­மான தமி­ழர்­களை இரா­ணு­வம் கொன்று குவித்­தி­ருந்­தது. இந்த நிலை­ யில் இந்த மன்­னார் மனி­தப் புதை­குழி கவ­னம் பெறு­கின்­றது.


இது­வரை 300 எலும்­புக்­கூ­டு­கள் மீட்பு!
மன்­னார் நக­ரில் ஏரா­ள­மான தமி­ழர்­கள் வசித்து வந்­த­னர். போர் முடிந்து பல வரு­டங்­கள் நி றை­வ­டைந்­தி­ருக்­கின்ற சூழ­லில்­தான் மன்­னார் நக­ரில் சதோ­ச­வுக்­கான கட்­ட­டம் கட்­டு­வ­த ற்கு நிலம் தோண்­டப்­பட்­டது.

அங்கு ஏரா­ள­மான எலும்­புக்­கூ­டு­கள் குவி­யல் குவி­ய­லாய் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இராணு­ வத்தினரால் வேட்­டை­ யில் கொல்­லப்­பட்ட மக்­க­ளின் எலும்­புக் கூடு­கள் இவை என்­பது பர­ ப­ரப்பை ஏற்­பட்­டுத்­தி­யது.

கடந்த செப்­ரெம்­பர் மாதத்­தி­லி­ருந்து அங்­குள்ள எலும்­புக்­கூ­டு­களை மீட்­கும் பணி­யில் சிறப் புச் சட்ட மருத்­துவ நிபு­ணர் சமிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான குழ­வி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர். இது­வரை அங்கு 300 எலும்­புக்­கூ­டு­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

தண்­ட­னைக்­குட்­ப­டுத்­திக் கொலை!
சில இடங்­க­ளில் ஒன்­றன் மீது ஒன்­றாக எலும்­புக்­கூ­டு­கள் குவி­யல் குவி­ய­லாய் அடுக்கி வை த்­த­து­போல கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. கம்­பி­யால் கட்­டப்­பட்ட நிலை­யி­லும் சட­லங்­கள் க ண்­டெ­டுக்­கப்­பட்­டன.


இது அர­சுக்­குக் கடும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. போரின்­போது கடத்­தப்­பட்ட, காணா­ம­ லாக்­கப்­பட்ட வடக்கு மாகா­ணத் தமிழ் மக்­களை இலங்கை இரா­ணு­வத்­தி­னர் கொன்று இங் கு புதைத்தமை வெளிப்­பட்­டது.

கண்­டெ­டுக்­கப்­பட்ட எலும்­புக்­கூ­டு­க­ளில் 12 வய­துக்­குட்ட 23 சிறு­வர்­க­ளின் எலும்­புக்­கூ­டு­க­ ளும் அடங்­கும். பேரா­சி­ரி­யர் சமிந்த ராஜ­பக்­சா­வின் தலை­மை­யில் இந்த எலும்­புக் கூடு­ களை மருத்­துவ நிபு­ணர்­கள், சட்ட நிபு­ணர்­கள், தட­ய­வி­யல் நிபு­ணர்­கள், தொல்­பொ­ருள் ஆய்­வுத் துறை­யி­னர் எனப் பல­ரும் ஆராய்ந்து வரு­கின்­ற­னர். தோண்­டி­யெ­டுக்­கும் பணி­க­ளைப் பார்­வை­யிடப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

குற்­றச் சம்­ப­வம் என்­கி­றார் ஆய்­வா­ளர்
சமிந்த ராஜ­பக்ச இது­கு­றித்­துக் கூறும்­போது, ‘‘ஏரா­ள­மான எலும்­புக் கூடு­கள் இங்கு கண்­ டெடுக்­கப்­பட்­டுள்­ளன. பல நாள்­க­ளாக இங்கு அக­ழாய்­வுப் பணி­க­ளைச் செய்து வரு­கி­றோ ம். இந்­தச் சம்­ப­வத்தை நாங்­கள் ஒரு குற்­றச் சம்­ப­வ­மா­கவே பார்க்­கி­றோம்.


ஒரு­வேளை இது மயா­ன­மாக இருந்­தால், புதைக்­கப்­ப­டும் சட­லங்­கள் கிடை­மட்­ட­மாக இருக்­ கும். ஆனால் இங்கு உடல்­க­ளைக் கொன்று குவித்து அப்­ப­டியே பள்­ளத்­தில் தள்­ளி­விட்­டது போல் உள்­ளது. கண்­டெ­டுக்­கப்­பட்ட எலும்­பு­கள் தற்­போது நீதி­மன்ற வளா­கத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் அமெ­ரிக்­கா­வின் மியா­மி­யி­லுள்ள ஆய்­வ­கத்­துக்­கும் சில எலும்­புக் கூடு­கள் பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன. ஆய்வு முடிவு வரும் வரை வேறு எந்­தத் தக­வ­லை­யும் தெரி­விக்க இய­லாது’’ என்­றார்.

ஆய்­வுக்­காக அமெ­ரிக்­கா­வுக்­குக் கொண்டு
செல்­லப்­பட்ட எம்பு எச்­சங்­கள்..
மன்­னார் புதை­கு­ழி­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மனித எலும்பு எச்­சங்­க­ளின் மாதி­ரி­கள் ஆய்­ வுக்­காக அமெ­ரிக்­கா­வுக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த மாதி­ரி­கள் அடங்­கிய பொதி, மன்­னார் நீத­வான் நீதி­மன்ற வளா­கத்­தி­லி­ருந்து பொலிஸ் பாது­காப்­பு­டன் எடுத்­துச் செல்­லப்­பட்டு இலங்கை கட்­டு­நா­யக்க பன்­னாட்டு விமான நிலை­யத்­தி­னு­டாக அமெ­ரிக்­கா­வுக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டது.

இது­வரை மன்­னார் ம னி தப் புதை­கு­ழி­யின் அகழ்­வுப் பணி­க­ளின் மூலம் 23 சிறு­வர்­கள் உள்­ளிட்ட 277 பேரின் மனித உடல் மீதங்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. கண்­ட­றி­யப்­பட்ட மனித உடல் மீதங்­ கள், மன்­னார் நீதி­வா­னின் நேர­டிக் கண்­கா­ணிப்­பில் தெரிவு செய்­யப்­பட்டு அமெ­ரிக்­கா­ வின் புளோ­ரி­டா­வில் உள்ள பீட்டா ஆய்­வ­கத்­துக்­குக் கார்­பன் பரி­சோ­த­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மன்­னார் நீதி­மன்­றத்­தின் கட்­ட­ளைக்கு அமைய தெரிவு செய்­யப்­பட்ட மனித மீதங்­கள் ஒரு சிறிய பெட்­டி­யில் மிக­வும் பாது­காப்­பா ன முறை­யில் பொதி செய்­யப்­பட்ட நிலை­யில் பி.232/18 என்ற வழக்கு இலக்­க­மி­டப்­பட்டு பொலிஸ் வாக­னம் ஒன்­றில் கட்­டு­நா­யக்கா விமான நிலை­யம் எடுத்­துச் செல்­லப்­பட்­டது. எலும்­புக்­கூ­டு­கள் உள்­ளிட்ட உடல் மீதங்­க­ளின் அகழ்­வுப் பணி­களை மேற்­கொண்டு வரும் மன்­னார் சட்ட வைத்­திய அதி­காரி சமிந்த ராஜ­ பக்ச நேர­டி­யாக இதை அமெ­ரிக்க ஆய்­வ­கத்­துக்­குக் கொண்­டு­செல்­கின்­றார்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் அனு­மதி கோரி­னர்..
இந்த நிலை­யில், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் சார்­பாக மன்­னார் நீதி­வான் நீதி­மன்­றில் கடந்த 17ஆம் திக­தி­யன்று சட்­டத்­த­ர­ணி­கள் நகர்­வுப் பத்­தி­ரம் ஒன்­றைத் தாக்­ கல் செய்து புளோ­ரி­டா­வில் கார்­பன் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தும்­போது அவற்றை அவ­தா­னிப்­ப­தற்­குக் காண­மல் ஆக்­கப்­பட்­டோர் சார்­பாக ஒரு­வர் செல்­வ­தற்கு அ னு­மதி கோரி­யி­ருந்­தார்­கள்.

இதற்­கான அனு­ம­தி­யினை மன்­னார் நீதி­மன்­றம் வழங்­கி­யி­ரு ந்­தது. இதற்­க­மையக் காணா­மல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி வி.எஸ்.நிரஞ்­சன் உட்­பட 4பேர் மனித மீதங்­கள் அடங்­கிய பொதி­யு­ டன் அமெ­ரிக்கா செல்­வ­தற்­குத் தீர்­மா­னிக்­கப்­பட்டது.

போர்க்­கா­லத்­தில் காணா­ம­லாக்­கப்­ பட்ட, கடத்­தப்­பட்ட தமி­ழர்­களே இங்கு புதைக்­கப்­பட்­ட­னர் என்­பது உண்­மை­யாக இருந்­தா­லும், இறு­திப் போரின்­போது இரா­ணு­வத்­தி­னர் புரிந்த மனி­ த­கு­லத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­கள் இழுத்­த­டிப்­புக்­குட்­பட்டு வரும் சூ ழ­லில் இந்த மன்­னார்ப் புதை­குழி விட­யத்­தில் தீர்­வை­யும், முடி­வை­யும் இழுத்­த­டிப்­ப­டு­வது சுல­பம் என்றே அர­சி­ய­ல­வ­தா­னி­கள் கரு­து­கின்­ற­னர்.

நேர­டிச் சாட்­சி­கள், கானொ­லி­கள், ஒளிப்­ப­டங்­கள், பன்­னாட்டு ஊட­கங்­கள் வெளிப்­ப­டுத்­திய உண்­மைச் செய்­தி­கள் என்று சாட்சியங்கள், சான்றா தாரங்கள் வலு­வாக இருக்­கின்ற இறு­திப்­போர்க் குற்­றங்­களை இழுத்­த­டிப்­புச் செய் ­கின்ற இலங்கை அர­சுக்கு இது வெறும் தூசு என்­ப­தும் அவர்­தம் கணிப்­பாக இருக்­கி­றது.