-
31 ஜன., 2025
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர
அனுராவுக்கு முன்னால் தனது சொந்தப் பிரச்சனை பற்றி பிரசங்கம் நடத்திய அர்ச்சுணா MP
மதுபோதையில் கடைக்குள் அட்டகாசம்- மதகுரு கைது! [Friday 2025-01-31 05:00]
![]() வவுனியா, ரயில் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த இந்து மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். |
கோண்டாவிலில் பாலியல் தொழில் - 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் கைது! [Friday 2025-01-31 05:00]
![]() யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல், மிக இரகசியமாக மேல் மாடியில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை வைத்து நபர் ஒருவர் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் |
ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு! [Thursday 2025-01-30 16:00]
![]() மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார் |
அனுரவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு! [Thursday 2025-01-30 16:00]
![]() ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. |
30 ஜன., 2025
மாவை சேனாதிராஜா
Senathirajah, அக்டோபர் 27, 1942 - என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
தனது 82வது வயதில் 2025 சனவரி 29 இல் காலமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.[1][2] வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,[2] இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]
அரசியலில்
[தொகு]சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.[2] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.[2] 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.[2] 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]
சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.[3][4] ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5] 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]
2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.[8][9] 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[10] 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12][13][14]
செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.[15]
தேர்தல் வரலாறு
[தொகு]தேர்தல் | தொகுதி / மாவட்டம் | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1989 நாடாளுமன்றத் தேர்தல்[4] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 2,820 | தெரிவு செய்யப்படவில்லை |
2000 நாடாளுமன்றத் தேர்தல்[7] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 10,965 | தெரிவு |
2001 நாடாளுமன்றத் தேர்தல்[10] | யாழ்ப்பாண மாவட்டம் | தவிகூ | 33,831 | தெரிவு |
2004 நாடாளுமன்றத் தேர்தல்[11] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 38,783 | தெரிவு |
2010 நாடாளுமன்றத் தேர்தல்[12] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 20,501 | தெரிவு |
2015 நாடாளுமன்றத் தேர்தல்[16] | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 58,782 | தெரிவு |
2020 நாடாளுமன்றத் தேர்தல் | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 20,358 | தெரிவு செய்யப்படவில்லை |
வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 82 ஆவது வயதில் 2025 சனவரி 29 திகதி இரவு உயிரிழந்தார்
ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் அழிப்பு! ரஷ்ய ராணுவம் அறிவிப்பு
29 ஜன., 2025
டென்மார்க் $2.1 பில்லியன் ஆர்க்டிக் ராணுவ திட்டத்தை டொனால்ட் ட்ரம்பிற்கு பதிலளிக்க அறிவிக்கிறது
28 ஜன., 2025
யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள்
25 ஜன., 2025
கிந்தவின் புதல்வர் யோஷித ராஜபக்ச கைது
பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்தார் மஹிந்த! [Friday 2025-01-24 19:00]
![]() தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார் |
23 ஜன., 2025
இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு- வெள்ளத்தில் கிராமங்கள்! [Thursday 2025-01-23 05:00]
![]() கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது.அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. |
லோச்சனாவினால் தப்பிய அர்ச்சுனா!
![]() அனுராதபுரம் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில் தான் சந்தேக நபர் என்று கூறி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில், புதன்கிழமை ஆஜரானார். |
சந்திப்பில் பங்கேற்காது தமிழரசு- கஜேந்திரகுமாருக்கு அறிவித்தார் சிறிதரன்! [Thursday 2025-01-23 05:00]
![]() தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன |
21 ஜன., 2025
அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை ஆரம்பம்! [Tuesday 2025-01-21 16:00]
![]() பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அனுரகுமார மறந்து விட்டார்! [Tuesday 2025-01-21 16:00]
![]() எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் சட்டம் அமுலில் இருக்கும்! [Tuesday 2025-01-21 16:00]
![]() பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். |
சென்னைப் பயணத்தை தடுக்க சுமந்திரன் சூழ்ச்சி?- நாடாளுமன்றில் சிறீதரன் குற்றச்சாட்டு. [Tuesday 2025-01-21 16:00]
![]() தனக்கு எதிராக போலியான பிரசாரங்களை பரப்பும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார். |
20 ஜன., 2025
அனுராவின் நேரடி கட்டளையால் கைது: ராணுவம் மன்னார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தம் மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்
எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து- விரைவில் சட்டமூலம்! [Monday 2025-01-20 06:00]
![]() பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் இன்று திணறுகிறார்கள், போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். |
இராணுவ முகாமில் இருந்து 73 துப்பாக்கிகள் மாயம்! [Monday 2025-01-20 06:00]
![]() இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. |
மகிந்தவுக்கு 4.6 மில்லியன் வாடகை- செலுத்தாவிட்டால் வெளியேற உத்தரவு! [Monday 2025-01-20 06:00]
![]() முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். |
மட்டக்களப்பில் நிரம்பி வழியும் குளங்கள் - வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ளக்காடு! [Monday 2025-01-20 06:00]
![]() மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் 9 அடிக்கு திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது |
18 ஜன., 2025
யாழ். நகரில் வருமான வரி அதிகாரிகள் போல நடித்து 30 இலட்சம் ரூபா கொள்ளை! [Friday 2025-01-17 17:00]
![]() யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது |
17 ஜன., 2025
யாழில். போலி தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த கனேடியன் பிரஜை கைது
போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில்
பழிவாங்கப்படும் நொச்சிக்குளம் மக்கள் - மன்னார் பொலிசாரே பொறுப்புக்கூற வேண்டும்! [Friday 2025-01-17 05:00]
![]() மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். |
16 நாட்களில் 5 பேர் சுட்டுக்கொலை -நாட்டில் என்ன நடக்கிறது? [Friday 2025-01-17 05:00]
![]() 2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பாதாள உலக பிரமுகர்களால் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தக் குற்றச் செயல்களை உடனடியாக ஒடுக்கவும் இந்த நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார். |
வண்டிச் சவாரியில் தொடங்கிய மோதல் - இதுவரை 7 பேர் பலி! [Friday 2025-01-17 05:00]
![]() மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
15 ஜன., 2025
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு கடிதம்! [Wednesday 2025-01-15 04:00]
![]() 25 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது |
கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு! [Wednesday 2025-01-15 04:00]
![]() சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது. |
13 ஜன., 2025
பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு
எமது பிரச்சினையை பேசாமல் ஸ்டாலினுடன் செல்பி எடுக்கவா சென்றனர்? [Monday 2025-01-13 17:00]
![]() இந்தியா - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர் |
இலங்கையில் 400 றோ உளவாளிகள்! [Monday 2025-01-13 06:00]
![]() இந்தியாவின் றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். |
பிரிந்தவர்களை இணைக்க உள்ளக கலந்துரையாடல்! [Monday 2025-01-13 06:00]
![]() பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் |
12 ஜன., 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பச்சைக்கொடி! [Sunday 2025-01-12 16:00]
![]() புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 தமிழ்த்தேசியக்கட்சிகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சந்திப்பில் தமது கட்சி பங்கேற்று முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி தெரிவித்துள்ளது. |