புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2025

இளங்குமரன் எம்.பி சட்டத்தை கையில் எடுக்க கூடாது! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com

தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இந்த இரு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக  யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தற்போது 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோயோடு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர், இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமைக் குழு கூடுகிறது! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது

கனடாவில் காருக்குள் மூச்சுத் திணறி வவுனியா இளைஞன் மரணம்! [Saturday 2025-01-04 17:00]

www.pungudutivuswiss.com

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 
வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது  20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ad

ad