புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2025

நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்த அர்ச்சுனா!- சூடாகிய சபாநாயகர். [Wednesday 2025-02-05 16:00]

www.pungudutivuswiss.com

நாடாளுமன்ற அடையாள அட்டை தனக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரைப் பார்த்து கடுமையாக சாடினார். நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அடையாள அட்டை தனக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரைப் பார்த்து கடுமையாக சாடினார். நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை- மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்! [Wednesday 2025-02-05 16:00]

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற  உறுப்பினர் இராமநாதன்  அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை  உள்ளது. ஆகவே அவரை  மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்  என  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

லசந்த படுகொலை சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை! [Wednesday 2025-02-05 16:00]

www.pungudutivuswiss.com


த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் முன்னாள் டிஐஜி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தனது சட்ட ஆலோசனையை வழங்கியுள்ளார்.

த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் முன்னாள் டிஐஜி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தனது சட்ட ஆலோசனையை வழங்கியுள்ளா

சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க உத்தரவு! [Wednesday 2025-02-05 16:00]

www.pungudutivuswiss.com


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில்(Switzerland) உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில்
இலங்கை தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளத

யார் ஜனாதிபதியாக வந்தாலும் இனஅழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில்! [Wednesday 2025-02-05 05:00]

www.pungudutivuswiss.com


எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இன அழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர் என வேலன் சுவாமிகள் கடுமையாக சாடியுள்ளார்.யாழ். - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இன அழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர் என வேலன் சுவாமிகள் கடுமையாக சாடியுள்ளார்.யாழ். - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி- ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் இரகசிய டீல்! [Wednesday 2025-02-05 05:00]

www.pungudutivuswiss.com


அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது. அதேநேரம் அரிசி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது. அதேநேரம் அரிசி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

ad

ad