புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2024

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் முதன்மை வேட்பாளர் கே வி தவராசா. யார் இந்த தவராசா? _________________________________

www.pungudutivuswiss.comசனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் முதன்மை வேட்பாளர் கே வி தவராசா. யார் இந்த தவராசா?

_________________________________
தமிழரசு கட்சியில் எங்கிருந்தோ வந்து இடம் பிடித்து கட்சியை சிதறடித்த அந்த ஒட்டகம் சுமந்திரனின் களத்தில் மணி கட்ட வந்த மீட்பன் இவன் பணத்தின் மேற்கே உள்ள சப்த தீவுகளின் மத்தியில் அமைந்துள்ள புங் குடுதீவு மண்ணில் எட்டாம் வட்டாரம் மடத்துவெளியில் பிரபல இரத்தினபுரி வர்த்தகர் வேலாயுத பிள்ளை செல்லம்மா தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாக வந்து உதித்த தவப்புதல்வன் தான் இந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவ ராசா இவர்களின் மூத்த சகோதரர் ஒருவர் லண்டனில் வாழ்ந்து வருகிறார் இன்னும் ஒரு மூத்த சகோதரி தாயகத்தில் வாழ்ந்து வந்த நிலையில் அண்மையில் இறைவன் அடி சேர்ந்து விட்டார் இவருக்கு பின்னால் இன்னும் ஒரு சகோதரி கொழும்பில் வாழ்ந்து வருகிறார் இன்னும் இரண்டு இளைய சகோதரர்களும் ஒரு சகோதரியும் ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார்கள் தவ ராசா அவர்கள் தனது உயர் கல்வியை ஸ்கந்தவரோதயா கல்லூரி கற்றபின் சட்டப் படிப்பை இலங்கை சட்டக் கல்லூரியில் தொடங்கினார் அங்கு கூட தமிழ் கலை கலாச்சார பேச்சு நிகழ்வுகளில் தீவான் தவராசா என்ற புனை பெயரிலேயே நிகழ்த்தி வந்தவர் படித்து முடித்து இருந்தார் சட்டக் கல்லூரியில் இருந்து 1981 ஆம் ஆண்டு சட்டத் தரணி யாக வெளியே வந்த இவர் தனது துணைவியார் காலம் சென்ற கவுரி சங்கர் உடன் இணைந்து புகழ்பெற்ற குட்டிமணி தங்கத்துரை ஜெகன் போன்றவர்களின் வழக்கினை சிறப்பாக வாதாடி இலங்கை முழுவதும் தனது சட்ட நுணுக்கத்தை முத்திரை பதித்தவர் அன்று முதல் கொழும்பில் இருந்து கொண்டு இவரது புகழ் பெற்ற சட்ட தனியாக துணைவியார் கௌரிசங்களுடன் இணைந்து ஏராளமான புகழ் பெற்ற பேசப்பட்ட ஊடகங்களில் தலைப்புகளில் நிரம்பி வழிந்த வழக்குகளில் தங்கள் வாத திறமையினால் நாம் வாதாடிய பக்கத்துக்கு மீதி கிடைக்கும் வண்ணம் போராடி வாழ்த்த வாழ்க்கை இவருக்கு சொந்தமானது இந்த தொழிலுக்கும் சேர்த்து வைத்த புகழுக்கும் பல இளைஞர்களை கொடுக்கக் கூடியதும் மாசு கற்பிக்கக் கூடியதுமான தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கில் துணிவோடு களமிறங்கி வாதாடத் தொடங்கினார் இதற்காக அவர் யாரிடமும் பேரம் பேசி சம்பளம் கதைத்து தொழிலாக நடத்தியவர் அல்ல இந்த வழக்குகளில் விடுதலையான ஆயுதக்கணக்கான மக்கள் இதற்கு சாட்சி சொல்வார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் போராளிகள் முன்னாள் அரசியல் கைதிகள் என்ற ரீதியில் அவர்கள் இந்த செய்திகளை பகிரங்கமாக வெளியே சொல்ல தயங்கி அமைதியாக இருக்கிறார்கள் ஒரு மனிதன் இலங்கையில் அதுவும் தமிழன் அரசியல் கைதியாக பிடிபட்டு சிறையில் இருக்கிறான் என்றால் உங்கள் மனதில் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் அவன் எவ்வளவு சித்திரவதயை அனுபவித்து நொந்து நூலாகி போயிருப்பார் என்று அவர்கள் ஒவ்வொரு காலையும் விடியும் பொழுது நரக வாழ்க்கை தொடங்குகிறது என்று நினைத்துக் கொண்டே இருப்பார்கள் இந்த நரக வாழ்க்கை என்று முடியும் என்று இயங்கிக் கொண்டே இருப்பார்கள் ஒவ்வொரு சகோதரனும் அப்பாக்களும் சகோதரிகளும் இந்த வேதனையான வாழ்க்கையை வருடக் கணக்கு வாழ்ந்து கழித்தவர்கள் இவர்கள் எவ்வளவு விரைவாக வெளியேற வேண்டுமோ அவ்வளவு ஆண்டவனை வேண்டிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு முன் மீட்பனாக வந்து சேர்ந்த ஒரு உத்தம தலைவன்தான் தவ ராசா ரவிராஜ் குமார் பொன்னம்பலம் இன்னும் பல சட்ட வா ளர்கள் ஊடகவியலாளர்கள் சமூக நல வாதிகள் இதுபோன்ற இன்றைக்கு வந்து தமது உயிரை பணயம் கொடுத்தது தான் மிஞ்சியது அந்த காட்சிகளை கண்முன்னே கண்டு இருந்தும் துணிச்சலோடு சிங்கத்தின் கைக்குள்ளே இருந்து சிறுத்தையாக அரசியல் கவிகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர் தான் இந்த தவறாச தவறாசாவுக்கு அரசியலில் ஈடுபட்டு தமிழ் மக்களுக்கு தனது இனத்துக்கு ஏதாவது தன்னால் முடிந்த தனது திறமைக்கு தீனி போடக்கூடிய சேவையை ஆட்ட வேண்டும் என்ற ஆவல் இளம் பருவத்திலிருந்து நீண்ட நாட்களாக இருந்து வந்தது இருந்தாலும் அதற்காக அவர் தனது பிறந்த ஊர் பகுதிக்கு யாழ்ப்பாண மண்ணுக்கு சென்று வாழ்ந்து வர வேண்டும் அங்கேயே மக்களுடன் ஐக்கியமாக வேண்டும் என்பது தெரிந்து சற்று பொறுத்துக் கொண்டிருந்தார் அந்த வேளையில் தான் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தனது அரசியல் பிரவேசத்தை தமிழரசு கட்சியில் ஆரம்பித்து இப்போது கொழும்பு கிளை தலைவராக இருந்து வருகிறார் இந்தக் காலங்களில் பலர் நமக்கு ஏன் வம்பு எப்படி இந்த பூனைக்கு மணி கட்டுவது என்று ஏங்கிக் கொண்டு இருக்க சுமந்திரன் என்ற ஒட்டகம் தமிழரசு கட்சி கூடாரத்தினால் புகுந்து இருப்பதை சுட்டிக்காட்டி உறுமிக் கொண்டிருந்தவர் கடைசியாக நேரடியாகவே பாய்ந்து விட்டார் தனக்கு நிகரான ஒருவர் வருவதை பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை கட்சியில் உயரிய பதவியை எடுப்பதை விரும்பாத சுமந்திரன் இவரை ஆரம்ப காலத்தில் இருந்தே மட்டம் தட்டி வந்திருக்கிறார் இறுதிக் காலங்களில் கட்சிக்குள்ளேயே சுமந்திரன் போன்ற ஒரு சிலரின் எதேசதிகார போக்கினை கண்டிக்க முடியாத நிலையில் அனுபவம் மிக்க கட்சிக்காக பல்லாண்டு காலம் உழைத்து வந்திருந்த சம்பந்தனும் மாவை சேனாதி ராசாவும் கையாலாகாதவர்களாக பொறுமையாக தாங்கிக் கொண்டு இருந்து விட்டார்கள் இறுதியில் சுமந்திரனை கட்சிக்கு இழுத்து வந்த சம்பந்தன் மீதே வளர்த்த கடாவாக நெஞ்சில் பாய்ந்த போது கூட ஏதும் செய்யாது பேசாாமல் இருந்தார்கள் இந்த ஒவ்வாத நிர்வாக திறமை தான் இப்போது தமிழரசு கட்சியில் பூசலாக வெடித்து கிளம்பி இருக்கிறது அதன் பரிசாக கூட்டமைப்பாக இருந்த கட்சிகள் வெளியேற தனித்து தமிழரசு கட்சியாக இருந்த கட்சி கூட துண்டு தூண்டாகியது 22 பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு முறை வென்று வந்த கூட்டமைப்பு தமிழரசு கட்சி இந்த தடவை எத்தனை ஆசனங்களை கைப்பற்றி என்பதிலிருந்து சுமந்திரன் கட்சி அழி ப்பு நடவடிக்கையின் வேகம் மக்களுக்கு புரியும் கே வி தவராசா இந்த விட ஆயத்தமும் இன்றி குறுகிய காலத்தில் சனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி ஒரு மாத காலத்தில் தேர்தலுக்கு வந்திருக்கிறார் அவரோடு சேர்ந்து பல தமிழரசு கட்சி முன்னணி ஆளர்களும் வாலிப முன்னணி மகளிர் அணி முழுவதுமாக துணைக்கு வந்து நிற்கிறது மக்கள் அவருக்கு வாக்களித்து நல்ல உத் வேகத்தை கொடுப்பார்கள் என்று நம்புவோமாக
www.pungudutivuswiss.comசனநாயக தமிழரசு கூட்டமைப்பு சின்னம் மாம்பழத்துக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ஒரு ஆய்வு அலசல் அங்கம் மூன்று __________________________
இனி தமிழ் தேசியக் கட்சிகள் என்ற வரிசையில் அங்கம் வைக்கும் கட்சிகளைப் பற்றி ஆராய்வோம் முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னணி பற்றி பார்ப்போம் முதல் தமிழ் கட்சியான காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பில் இணைந்த பின் மௌனித்திருந்தது விடுதலைப்புலிகள் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கிய போது அங்கே இவர்களுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டது முக்கியமாக திருமதி சிதம்பர நாதன் கஜேந்திரகுமார் கஜேந்திரன் ஆகியோருக்கு அந்த உறுப்பினர் பதவிகள் கிடைத்தன இங்கே குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ரீதியில் கையேந்திர குமாருக்கும் பல்கலைக்கழகத்தில் இருந்து பொங்கு தமிழ் ஆரம்பித்த ஒரு புரட்சி மாணவன் என்ற ரீதியில் புலிகளின் சிபாரிசில் கஜேந்திரனுக்கு இடம் கிடைத்தது போராட்டம் மௌனித்த பின்னர் கஜேந்திர குமார் அணிக்கு கிடைத்த ஆசனங்கள் போதாது என்ற ரீதியில் கூட்டமைப்பிலிருந்து முதன் முதலில் வெளியேறி தனித்து நின்று போட்டியிட்டவர்கள் இவர்கள் அன்று முதல் புலிகளுக்கு சொந்தக்காரர்கள் என்றும் மற்ற தமிழ் கட்சிகள் எல்லாம் துரோகிகள் என்றும் தாங்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு விலை போகாத கட்சி என்றும் பிரச்சாரத்தை தொடங்கினார்கள் தமிழீழம் பெற்றுத் தருவோம் என்று தொடங்கியவர்கள் இப்போது சமஸ்டியில் வந்திருக்கிறார்கள் ஏனைய முக்கிய தமிழ் கட்சிகளும் இதே சமஸ்டியை தான் வலியுறுத்துகின்றன மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் தனி நாடு என்றும் ஒரு நாடு இரு தேசம் கொள்கை என்றும் மக்களை ஏமாற்றுகின்ற வித்தையை கொண்டுள்ளவர்கள் ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கே சென்று ஒரு நாடு என்ற கொள்ளைக்கு கீழ் சத்திய பிரமாணம் செய்வார்கள் அந்த அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்து சத்தியம் செய்வார்கள் அவர்களின் தனிநாட்டுக் கொள்கைக்கு இந்த சத்திய பிரமாணம் எதிரானது முக்கியமான கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் இலங்கையில் முதல் 10 பணக்காரர்கள் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வந்து தமிழ் தமிழர் என்று கோஷமிடும் இவர் கொழும்பில் சிங்கள வங்கியில் தனது பங்கை வாங்கி வைத்திருக்கும் ஒரு முதலாளி அதாவது சிங்கள தேசத்தில் தனது முழு சொத்தையும் முதலீடு செய்துள்ள ஒரு துரோகி முதலீடு செய்யும் ஒரு முதலாளி என்றால் தமிழருக்கு உதவுவதாக அல்லது தமிழ் பிரதேசங்கள் இருப்பதான நிறுவனங்கள் அல்லது தமிழர்களின் உணர்வாழ்வை தமிழரின் வேலை வாய்ப்பை கொடுக்கக் கூடிய தமிழ் பிரதேசங்களில் முதலீடு செய்து இருக்கலாம் உண்மையான தமிழ் உணர்வு உள்ளவராக இருந்திருந்தால் இது முதல் அடி தேர்தல் முடிய வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுலா வந்து கொண்டிருப்பவர் கடைசியாக தொடர்ந்து ஆறு மாதங்கள் பாராளுமன்றத்துக்கு லீவு கேட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது கஜேந்திரன் மட்டும் என்ன செய்வார் தனியாக எங்காவது சிறு சிறு போராட்டங்களை மறியல்களை செய்து கொண்டு கட்சியை இழுத்துச் செல்கிறார் இவர்கள் மூன்று தடவை என்பியாக பாராளுமன்ற சென்றார்கள் தமிழ் மக்களுக்காக இதுவுமே செய்யவில்லை இவர்களின் கோஷத்தின் படி கொள்கையின்படி அதற்காக எங்கே என்ன செய்தார்கள் இந்த முன்னேற்றம் கொடுத்தார்கள் இவர்கள் கேட்கும் தீர்வுக்கு அல்லது கொள்கைக்கு சார்பாக இதனை பெற்றுள்ளார்கள் இப்பொழுதும் இனித்தான் பிறப்புகிறோம் இனி தான் கேட்கப் போறோம் இனி தான் கண்டுபிடிக்க போகிறோம் என்று போலி கோஷங்களை சொல்லிக் கொண்டு இருப்பவர் இவர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு மறைமுகமாகவும் நேரடியாகவும் பண உதவி செய்து கொண்டிருக்கிறது நேரடியாக புனர்வாழ்வு வாழ்வாதாரம் என்ற ரீதியில் பினாமி பெயர்களில் பணத்தினை பெற்று மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த உதவியை வைத்து தேர்தல் வரும் போது வாக்கு கேட்க செல்கிறார்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் இவர்கள் அங்குள்ள புலிகளின் அலுவலகங்களுக்கு புலிகளின் உள்ளக கூட்டங்களில் பங்கு பற்றி அவர்களின் மண்டையை கழுவி நிதியினை கேட்டு வருகிறார்கள் புலிகளும் உணர்ச்சிவசமான அரசியலுக்கு ஆசைப்பட்டு இவர்களிடம் அவிந்து விடுகிறார்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிய தமிழ் கட்சிகள் பிளவு பட்டிருப்பது நாள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் ஆட்சி அமைக்க தேவையான வாக்குகளுக்கு தமிழரசு கட்சி காத்திருக்கும் உங்களை அவர்கள் காலை வாரிவிட்டு பிரபலமான தமிழ் துரோக கட்சியான இபி டி பி க்கு ஆட்சி போகும் வகையில் வாக்களிக்கிறார்கள் இவர்கள் எப்படி தமிழ் தேசியக் கட்சி என மக்கள் அங்கீகரிக்க முடியும் தமிழரசு கட்சியை எதிர்க்க வேண்டும் தமிழரசு கட்சியை விடக்கூடாது தமிழரசு கட்சி சபைகளில் ஆட்சி அமைக்க கூடாது என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள் அதற்காக அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இ பி டி பி கட்சிக்கும் டக்ளசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்களிப்பில் துணை நின்றவர்கள் வேலணை யாழ்ப்பாணம் நல்லூர் சாவகச்சேரி போன்ற இடங்களில் இவர்களது கைவரிசையில் இபிடிபி ஆட்சி அமைத்த வரலாறு உண்டு இவர்களை தமிழ் தேசிய கட்சி என்று மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் தேர்தலுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் தலை காட்டுவார் தவிந்த நேரங்களில் கொழும்பிலும் வெளிநாடுகளும் உல்லாசமாக வாழ்ந்து திரிபவர் மக்களோடு மக்களாக வாழ்பவரோ மக்களின் குறைகளை வடக்கு கிழக்கு சென்று கவனிப்பாரோ கேட்டுத் தெரிந்து கொள்பவரோ தீர்வு காண்பவரே அல்ல இதனை விட இவர்கள் பிரதேச வாதத்தை விதைப்பவர்கள் முக்கியமாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்க அதனை உண்மையான வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் இனத்தை நேசிப்பவர்களாக இருந்தால் கிழக்குக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் விஷயம் என்னவென்றால் கையேந்திரனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக பிரிந்து சென்றவர்கள் கையேந்திரன் தோல்வி கண்டபோது அவருக்கு எம் பி பதவி கொடுத்து சமாளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்த இடத்தினை கயேந்திரனுக்கு கொடுத்திருந்தார் இதே நிலையில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை தமிழரசு கட்சி அம்பாறைக்கு ஒரு தமிழ் பிரதிநிதி வேண்டும் என்ற நிலையில் வழங்கி கௌரவித்தார்கள் இந்த இடத்தில் தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு இணைந்த தாயக தேசிய கட்சி என்பதை நிரூபித்திருக்கிறார் முக்கியமாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வி கண்ட நிலையில் அவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் உண்மையில் மாவை அந்த இடத்தை தியாகம் செய்து அம்பாறைக்கு விட்டுக் கொடுத்தார் மாவை சேனாதி இரண்டாவது தியாகம் இது முதலில் கொழும்பில் இருந்து வந்த விக்னேஸ்வரனை மாகாண முதல்வராக ஆக்க எண்ணி அந்த இடத்திலேயே விட்டுக் கொடுத்த ஒரு தியாகி மாவை சேனாதிராசா 

ad

ad