இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது |
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது |
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர |
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். |
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். |
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முப்படையினரையும் பலப்படுத்த விரும்புவதுடன் கூட்டுப்படைகளின் தளபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்க விரும்புகின்றார். வியாழக்கிழமை நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட இலட்சியமான தேசிய மாற்றம் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இராணுவத்தை பலப்படுத்தவும் கூட்டுப்படைகளின் தளபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் விரும்புகின்றார் |
யாழ்ப்பாணம் -தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த போது, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் |
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த இராணுவ அதிகாரி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்விடுமுறையில் வீடு செல்வதற்காக இராணுவ அதிகாரி அங்கு தரித்து நின்றபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது |
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என கூறப்படுகிறது. |
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வு அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார் |
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது அரச புனாய்வுப்பிரிவினைச் சேர்ந்தவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்துள்ளார் |
கனடாவின் தெற்கு வின்னிபெக் என்ற பிரதேசத்தில் இருந்து இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்னர் |
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது கட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். பொஸன் தினத்தை முன்னிட்டு வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. |
ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூசகமாக தெரிவித்தார், எனினும் அவர் எந்த தேர்தல் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன |
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார் |
சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் |
கவிஞர் வைரமுத்து மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு பிரபல பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். தன்னிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி உட்பட 17க்கும் மேற்பட்ட பெண்கள், கவிஞர் வைரமுத்து மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது |
தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது. |
கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞன் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. |
வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் |
லெப்டினன்ட் கேணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. |
துருக்கிய-பல்கேரிய எல்லையில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் மத சிறுபான்மையினர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் பெறத் தவறினால் கடும் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த புலம்பெயர் மக்கள் நீண்ட கால சிறைவாசம் அல்லது மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. அஹ்மதிய முறையைப் பின்பற்றுபவர்களே துருக்கிய எல்லையில் திரண்டுள்ளதுடன் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பாக செல்லும் முயற்சியில் இறங்கியவர்கள் |
உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார் |
தையிட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பொலிஸார் செயற்பட்ட விதம் முறையற்றது. இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார் |
”3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி. க்கு ஆகக்குறைந்த தண்டம் விதிக்கப்பட்டது ஏன்? புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருக்கும் அவரின் பதவி பறிக்கப்படுமா ?”என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினர் |
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது |
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர் |
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டது |
வவுனியா - வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர் |
ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது |
இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. |
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். |
சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
சகல வகை பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று முதல் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது |
உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சைனோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது |
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் வாக்களிக்க தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி , ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன |
முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார் ? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது |
வெளிநாட்டு மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் தடுக்கப்படும் என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் குறித்த விவகாரம் தொடர்பில் அறிவிப்பு வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது |
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளது. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி விவகார அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார் |
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜப்பானில் வந்திறங்கிய பின்னர் தான், அவர் பயணித்த விமானமானது பிரான்ஸ் ராணுவத்திற்கு சொந்தமானது என வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் நடவடிக்கைகள் அவரது நட்பு நாடுகளின் தலைவர்களையே கோபம் கொள்ள வைத்தது |
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்துள்ளார் |
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 298 ஏக்கர் காணி விமானப்படைத் தளம் அமைப்பதற்கு வழங்கப்படவிருப்பதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் |