புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2023

15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

www.pungudutivuswiss.com


உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டை 15 மாதகால் கடும் யுத்தத்தின் பின்னர் 
முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது.

ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் குழுவின் தலைவர்  யெவ்ஜெனி ப்ரிகோஜின் தனது துருப்புக்கள் பாக்முட் நகரை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தார். அதற்கான பல காணொளி சான்றுகளையும் வெளியிட்டார்.

கடந்த 15 மாதகாலப் போரில் பாக்முட்டை (சோவியத் ரஷ்யா காலத்துப் பொயர் - ஆர்டியோமோவ்ஸ்க்) ரஷ்யா கைப்பற்றியிருப்பது மிகப் பொிய வெற்றியைப் பிரதிபலிக்கிறது.

ஆர்டியோமோவ்ஸ்கின் விடுதலை முடிந்தது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு வரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக சனிக்கிழமையன்று பாக்முட்டை கைப்பற்றிவிட்டதாக பிரிகோஜினின் கூறிய கூற்றை உக்ரைன் மறுத்திருந்தது. ஆனால் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு எதுவித பதிலையும் உக்ரைன் வழங்கவில்லை.

பாக்முட் நகரைக் கைப்பற்றிய துருப்புக்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்தார். 

பாக்முட் நகரைக் கைப்பற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று ரஷ்ய உள்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பக்முட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனியப் படைகள் ஆறு மாதங்களுக்கு மிக விரைவான முன்னேறியதாக வெளிவந்த வெற்றிச் செய்திகளுக்குப் பின்னர் ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தங்களுக்கு உரிய ஆயுதங்களை வழங்கவில்லை. இதனால் எங்களது வீரர்கள் உயிரிழக்கிறார்கள். எனவே நாங்கள் பாக்முட்டை விட்டு வெளியேறி ஓய்வு எடுக்கப் போகிறோம் என்றும் கைப்பற்றி இடங்கள் ரஷ்யப் படைகளிடம் கொடுக்கப்படும் என்று  வாக்னர் தனியார் இராணுவத்தின் தலைவர் ப்ரிகோஜின் ரஷ்யாவைக் கண்டபடி திட்டி காணொளி வெளியிட்டிருந்தார்.

இதேநேரம் உக்ரைனின் முன்னோக்கிய தாக்குதலை அடுத்து தாங்கள் கைப்பறிய இடங்கலிருந்து சில இடங்களை விட்டு ரஷ்யப் படைகள் பின்வாக்கியது உண்மை என்று ரஷ்யா அறிவித்த நிலையில் இந்த வெற்றிச் செய்தி வெளிவந்துள்ளது.

இன்று மதியம் பாக்முட் நகரம் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக பிரிகோஜின் ஒரு காணொளியில் கூறினார். அதில் அவர் ரஷ்ய கொடிகள் மற்றும் வாக்னர் பதாகைகளை அசைத்துக் கொண்டு  போராளிகள் நின்றனர்.

உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டில் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் ரஷ்யா அழித்துவிட்டது என உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். 

பாக்முட் நகரம் எங்கள் இதயங்களில் மட்டும் உள்ளது என்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பாக்முட் நகரைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இக்கருத்தை வந்துள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த க்ரூப் ஆஃப் செவன் கூட்டத்தில் நகரத்தின் நிலை குறித்து நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜெலென்ஸ்கி இக்கருத்தை வெளியிட்டார். பக்முட் இன்றுவரை ரஷ்ய கூட்டமைப்பால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று கூறினார்.

மூடுபனியால் நிலத்தில் உள்ள படையெடுப்பு நிலைமைகளை எங்களால் உறுதி செய்யமுடியாது உள்ளது என்றார்.

ad

ad