புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2023

கஜேந்திரகுமார் தாக்கப்பட்ட விவகாரம்- அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் புலனாய்வு அதிகாரி உட்பட சிவில் அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொலிஸ் பாதுகாப்பு இன்றி பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் அவரது பாதுகாப்பிற்காக புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபர் எம்.பி.யை தாக்க முயற்சிப்பது மற்றும் வன்முறையாக நடந்து கொள்ளும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த காணொளியின் படி, அந்த பகுதியில் சிவில் அதிகாரி ஒருவரிடம் எம்.பி., அடையாள அட்டையை கோருவது காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அமைச்சர் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான உண்மைகளை திங்கட்கிழமை நீதிமன்றில் தெரிவிப்பதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ad

ad