புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2023

புடினுக்கு சொந்தமான அரண்மனைக்கு அடியில் இரகசிய பதுங்கு குழி! வெளியில் கசிந்த வரைபடத்தினால் சர்ச்சைவிளம்பரம்

www.pungudutivuswiss.com


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சொந்தமானதாக கூறப்படும் அரண்மனைக்கு அடியில் இரகசிய பதுங்கு குழி இருப்பதாக வரைபடங்கள் கசிந்துள்ளன.

கருங்கடல் எல்லையில் ரஷ்யாவின் Gelendzhik நகரத்தில் அமைந்துள்ள புடின் அரண்மனையின் திட்ட வரைபடங்கள் கசிந்துள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சொந்தமானதாக கூறப்படும் அரண்மனை சுமார் 190,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாகவும், அதில் தேவாலயம், சூதாட்ட விடுதி, உடற்பயிற்சி கூடம், ஐஸ் ஹாக்கி ரிங்க் மற்றும் பொழுதுபோக்கு அறையென அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புடினுக்கு சொந்தமாக இந்த அரண்மனை தொடர்பான வரைபடத்தை 2021-ல் இத்திட்ட வரைபடங்களை வெளியிட்டு அலெக்ஸி நவல்னி வெளியில் கசியவிட்டுள்ளார்.

புடினுக்கு சொந்தமான அரண்மனைக்கு அடியில் இரகசிய பதுங்கு குழி! வெளியில் கசிந்த வரைபடத்தினால் சர்ச்சை | Secret Bunker Beneath Putin Palace Leaked Maps

ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் போராட்டம் 

இதனையடுத்து ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வீதியில் இரங்கி புடினுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அந்த அரண்மனை தனக்கு சொந்தமில்லை எனவும் புடின் மறுத்திருந்தார்.

இந்நிலையில், மெட்ரோ ஸ்டைலின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரைபடங்களின்படி, பதுங்கு குழிகளுக்கு அவற்றின் சொந்த காற்றோட்ட அமைப்பு மற்றும் புதிய நீர் விநியோகம் உள்ளது.

புடினுக்கு சொந்தமான அரண்மனைக்கு அடியில் இரகசிய பதுங்கு குழி! வெளியில் கசிந்த வரைபடத்தினால் சர்ச்சை | Secret Bunker Beneath Putin Palace Leaked Maps

இந்தத் திட்டங்கள் நிலத்தடியில் சுமார் 50 மீட்டர் தொலைவில் இரண்டு சுரங்கங்களை வெளிப்படுத்தியுள்ளதுடன்,அவை மூன்று சுரங்கப்பாதை நுழைவாயில்களைக் காட்டுகின்றன.

குறித்த திட்டங்கள் யாரோ ஒருவர் உயிர் பிழைப்பதற்காகவோ அல்லது தப்பிப்பதற்காகவோ திட்டமிடப்பட்டவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ad

ad