புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2023

வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பு, தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுக்க அஸ்கிரி பீடம் ஜனாதிபதிக்கு அழுத்தம்!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்துள்ளார்

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அஸ்கிரி மகாநாயக்கர் கடிதமொன்றினையும் கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள வரலாற்று சிறப்புமிக்க வணக்கஸ்தலங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது பல்வேறு மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் தொல்லியல் தொடர்பான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு வெளித்தரப்பினர் வழங்கும் உதவிகளை பயன்படுத்த வேண்டுமெனவும் அந்தக் கடிததத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்களால் இனவாத மற்றும் மதவாத நெருக்கடிகள் உருவாவதாகவும், அந்தச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad