புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2023

ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்

www.pungudutivuswiss.comரெயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை 
மத்திய அரசு உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்: ஆ.ராசா எம்.பி. 3 ஜூன்
 2023 3:45 PM "ஒடிசாவில் தங்கியிருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்" ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 3 ஜூன் 2023 3:37 PM பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்" - சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி 3 ஜூன் 2023 2:53 PM ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம் 3 ஜூன் 2023 2:10 PM ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை மேற்கு வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 3 ஜூன் 2023 1:25 PM இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரெயில் விபத்து மாறியிருக்கிறது- கமல்ஹாசன் 3 ஜூன் 2023 1:25 PM கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணித்ததாக தகவல் 3 ஜூன் 2023 1:22 PM ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு ரெயில் விபத்து நடைபெற்ற இடமான பாஹநஹாவில் பிரதமர் நரேந்திர மோடிநேரில் ஆய்வு செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதையொட்டி பாஹநஹாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லியிலிருந்து புவனேசுவரத்துக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாஹநஹாவுக்கு வருகை தந்துள்ளார். ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். சீரமைப்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி ஆய்வுக்கு பிறகு கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். 3 ஜூன் 2023 12:20 PM ரெயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? - திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேட் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை?ஏன் மொத்த இந்திய ரெயில் பாதைகளில் 2% மட்டுமே கவாச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.. மத்மா பானர்ஜி (2011 -2012) ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபோது Train Collision Avoidance System ( ரயில் மோதுவதை தவிர்க்கும் அமைப்பு ) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் வழக்கம்போல் அதிகாரத்துக்கு வந்ததும் கவாச் என்று பாஜக அந்த திட்டத்துக்கு பெயர் மாற்றி அதற்கான பெருமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை இந்த தொழில்நுட்பத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் பாஜக அரசு செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் மூன்று நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். 3 ஜூன் 2023 12:02 PM ஒடிசா ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் மேற்கு வங்ககாள முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- "கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரெயில்களில் ஒன்று; நான் 3 முறை ரெயில்வே மந்திரியாக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரெயில் விபத்து இதுவாகும்! இதுபோன்ற வழக்குகள் ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள்; எனக்குத் தெரிந்த வரை ரெயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை; பாதுகாப்பு கருவி ரெயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது; இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும்!" என கூறினார்.

ad

ad