புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2023

வவுனியாவில் குண்டுதாரிகளாம்! - பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு.

www.pungudutivuswiss.com

வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

வவுனியா - இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றைய தினம் சென்ற இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்கு வைத்து இந்த பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித் திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.

குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா பொலிஸாரால் எமக்கு வழங்கப்படவில்லை என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தகவல் காரணமாக நகரப் பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ad

ad