புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2023

சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்

www.pungudutivuswiss.com
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ரயில் விபத்தில் காயமடைந்த 132 பயணிகள் கோபால்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
இது தவிர, காயமடைந்த 47 பேர் பாலசோரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்றுகொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதியதால், அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன.
பாலசோர் அருகே உள்ள பஹானாகா பஜார் ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடந்தது.
விளம்பரம்
மூன்று ரயில்களுக்கு நடுவே நடந்த விபத்து
ஜூன் 2ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடந்த இந்த விபத்து மொத்தம் மூன்று ரயிகளுக்கு நடுவே நடந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன.
என்.டி.ராமராவின் அரசியல் வேர்களை சாமர்த்தியமாக வெட்டிய மருமகன் சந்திரபாபு நாயுடு
1 ஜூன் 2023
பொறியியல் படிப்பு: கணினி பாடப்பிரிவில் சேர்வது ஆபத்தா? எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது?
1 ஜூன் 2023
கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' உண்மையில் இருந்ததா? – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
7 மணி நேரங்களுக்கு முன்னர்
அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன,” என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் தலைமைச் செயலாளார் பிரதீப் ஜெனா, “இரண்டு ரயிலிலும் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீதும் மோதியது,” என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசியவர், “பாலசோர் மருத்துவக் கல்லூரி, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, பாலசோர் மாவட்ட மருத்துவமனை, பத்ரக் மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன,” என்று கூறினார்.
அதோடு, ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய பிரதீப் ஜெனா, "இந்த விபத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை," என்று தெரிவித்தார்.
பிடிஐ செய்தி முகமை இந்த விபத்தில் 350 பேருக்கும் மேல் காயமடைந்து இருக்கலாம் எனவும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஒடிசாவில் ரயில் விபத்து
பட மூலாதாரம்,SUBRAT PATI
நேரில் செல்லும் ரயில்வே துறை அமைச்சர்
விபத்து நடந்த பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்,” என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், “நாங்கள் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். நாளை காலையில் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்வேன்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவுவதும்தான் இப்போதைய முன்னுரிமை,” என்று கூறியுள்ளார்.
உதவிக்கு வந்த மேற்கு வங்க முதல்வர்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே துறையுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தனது மாநிலத்தில் இருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு மாநில அரசு நிவாரணம் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 1
இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தபட்சம் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக புவனேஸ்வரை சேர்ந்த பிபிசியின் செய்தியாளர் சுப்ரதா பதி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் கியான் ரஞ்சன் தாஸ், “அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக” கூறினார்.
பிடிஐ, ஏஎன்ஐ செய்தி முகமைகள் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்திருப்பதைக் காணக்கூடிய வகையிலான சில படங்களை வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்
பட மூலாதாரம்,ANI
பிரதமர் இரங்கல்
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண்
மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களையும் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது.
Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 2
ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து
பட மூலாதாரம்,SUBRAT PATI
திருப்பிவிடப்பட்டுள்ள பிற ரயில்கள்
இந்த விபத்து காரணமாகப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.
ஹவுரா-புரி விரைவு ரயில், ஹவுரா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா சென்னை மெயில், ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா சென்னை கோரமண்டல் ரயில் விபத்து அவசர கால உதவி எண்கள்: 06782-262286 ( ஒடிசா அரசு உதவி எண் ) ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை)
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad